இணைய தொடர் இயக்குனரை சுட்டுக் கொன்றது ஏன்? மும்பை போலீஸ் கமிஷனர் விளக்கம்

மும்பை, 17 சிறுவர்களை சிறைப்பிடித்த இணைய தொடர் இயக்குனர் ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் ஏன் வந்தது என்பதற்கு மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி விளக்கம் அளித்துள்ளார். மும்பை பவாய் பகுதியில் உள்ள ஏ.ஆர். ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இணைய தொடர் (வெப் சீரிஸ்) இயக்குனரான ரோகித் ஆர்யா (வயது 50) சிறுவர்- சிறுமிகள் 17 பேர் உள்பட 19 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இணைய … Read more

புரோ கபடி இறுதிப்போட்டி: புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி ’சாம்பியன்’

புதுடெல்லி, 12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கியது. இதில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் இன்று நடந்தது. இதில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி-புனேரி பால்டன் அணிகள் சந்தித்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் டெல்லி அணி 20 புள்ளிகளும், புனே அணி 14 புள்ளிகளும் எடுத்திருந்தன. முதல் பாதி முடிவில் புனே அணி 6 புள்ளிகள் பின் … Read more

கரீபியன் நாடுகளை தாக்கிய புயல் – 49 பேர் பலி

கிங்ஸ்டன், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகள் கரீபியன் தீவுநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இதில் கியூபா, ஹைதி, ஜமைக்கா, டொமினிக்கன் குடியரசு உள்பட 13 நாடுகள் உள்ளன. இதனிடையே, பசிபிக் பெருங்கடலில் மொலீசா என்ற புயல் உருவானது. இந்த புயல் நேற்று கரீபியன் நாடுகளை தாக்கியது. புயலால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மொலீசா புயலால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். ஹைதி … Read more

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ்.! | Automobile Tamilan

இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 0 ஆல்ஃபா எலக்ட்ரிக் எஸ்யூவி தாயரிக்கப்பட்டு ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு எலிவேட் போல ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சந்தையின் மதிப்பை அதிகரிக்க இந்நிறுவனம் 2030க்குள் 10 கார்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்காக பிரத்தியேகமான குழு ஒன்றை உருவாக்கியுள்ள ஹோண்டா இதன் மூலம் செடானை கடந்து பல்வேறு புதிய மாடல்களை சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கவும் ஓருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ள நிலையில், α (Alpha) முதல் மாடலாக 0 சீரிஸ் … Read more

Ajith: "F1 படத்தில் Brad Pittடிடம் கேட்கும் கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்" – அஜித்தின் பதில் என்ன?

நடிகர் அஜித் குமார், இப்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கியிருக்கும் அஜித் குமார், தனது சினிமா வாழ்க்கை குறித்தும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்தும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார். அஜித் குமார் ‘F1’ பட கேள்வியும் அஜித் சொன்ன … Read more

பேட்மிண்டன் வீராங்கனைக்கு ரூ.5 லட்சம்: துணை முதல்வர் வழங்கினார்

சென்னை: ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை எஸ்.ஆர். தீக்ஷாவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையை துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சீனாவில் கடந்த அக்.21 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்ற பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று தமிழக வீராங்கனை எஸ்.ஆர்.தீக்ஷா சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அவரை ஊக்கப்படுத்தும் விதமாக வீராங்கனை எஸ்.ஆர்.தீக்ஷாவுக்கு துணை … Read more

இந்தியா – சீனா எல்லையில் கடும் பனிப்பொழிவு

காங்டாக்: இந்தியா, சீனா எல்லையை ஒட்டி அமைந்துள்ள நாதுலா கணவாய், குபுப், சோம்கோ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிப் பொழிவு பதிவாகி உள்ளது. இதனால் சிக்கிம் மாநிலத்தில் வெப்பநிலை குறைந்துள்ளது. உயரமான சில மலைப் பகுதியில் வெப்பநிலை ஜீரோ டிகிரிக்கும் கீழே சென்றுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மிகவும் மோசமான வானிலை தொடரும். இதையடுத்து சிக்கிம் மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு … Read more

பொங்கலுக்கு முன் சப்ரைஸ்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தயாரான பரிசு.. தேதி குறித்த தமிழக அரசு

Tamil Nadu Government: பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் 2025 நவம்பர் 15ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.   

உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த தாசில்தார் வாகனத்தை மறித்து ‘பட்டா’ கேட்ட கிராம மக்கள்! இது திருச்சி சம்பவம்…

திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த தாசில்தார் வாகனத்தை கிராம மக்கள் மறித்து ‘பட்டா’ கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அனைத்து பிரச்சினைகளக்கும் உடனடி தீர்வு காணப்படும் என கூறப்பட்டாலும் பல  பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் தாமதமும், அதிகாரிகளின் லஞ்ச லாவண்யமும் தலைவிரித்து ஆடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே இந்த முகாமில், நிலம் அளப்பது, பட்டா மாறுதல்,  கூட்டு பட்டு பிரிவினை போன்றவற்றுக்கு பலர் மனு கொடுத்துள்ள … Read more

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை செல்லும்- தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் டெல்லியிலுள்ள ரூ.16 கோடி சொத்துகளையும், 7 வங்கி கணக்கில் இருந்த சுமார் ரூ.7 கோடி பணத்தையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்ட(பி.எம்.எல்.ஏ) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்ட(பி.எம்.எல்.ஏ) தீர்ப்பாயம் விசாரித்தது. விசாரணை முடிவில், கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கை … Read more