லண்டனில் ஹாலிவுட் நடிகரை சந்தித்த மாளவிகா மோகனன்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டா கிரோன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தங்கலான் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன், லண்டனுக்கு சென்று ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டா கிரோன் என்பவரை சந்தித்துள்ளார். இவர், தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் மாளவிகா மோகனன், பல மாதங்களுக்கு பிறகு டேனியல் அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி. இருவரும் தங்கலான் படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.