சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல்

புதுடெல்லி: சர்​வ​தேச அமை​திக்​கும் ஸ்திரத்​தன்​மைக்​கும் இந்​தி​யா, ஜப்​பான் உறவு வலு​வாக இருப்​பது அவசி​யம் என்று புதி​தாக பதவி​யேற்​றுள்ள ஜப்​பான் பிரதமர் சனே தகைச்​சி​யிடம் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். ஜப்​பான் நாட்​டின் புதிய மற்​றும் முதல் பெண் பிரதம​ராக சனே தகைச்சி கடந்த 21-ம் தேதி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஏற்​கெனவே எக்ஸ் தளத்​தில் வாழ்த்து தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில தினங்​களுக்கு முன்பு சனே தகைச்சி பிரதம​ராக பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்​து, … Read more

பசும்பொன் செல்லும் முதல்வர்: மதுரை நான்கு வழிச்சாலை தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் மயக்கம்

மதுரை: மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்திக்கு செல்லும் தமிழக முதல்வரை வரவேற்கும் வகையில் மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் இருந்து மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில், அந்தந்த ஊராட்சிகள் சார்பில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் சிலைமான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்காததால் மயங்கினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்.30-ம் தேதி நடைபெறும் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் … Read more

நடுவானில் விமானத்தில் 3 பேரை கத்தியால் குத்திய இந்தியர் கைது

புதுடெல்லி: கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்திலிருந்து பிராங்க்பர்ட்டுக்கு லுப்தான்ஸா விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த 28 வயதான இந்தியாவைச் சேர்ந்த பயணி பிரணீத் குமார் உசிரிபள்ளி, சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது 17 வயதான 2 இளைஞர்களை முள்கரண்டியால் (ஃபோர்க்) பிரணீத் குமார் குத்தியுள்ளார்.இதனால் விமானத்தில் உள்ளவர்கள் பீதியடைந்தனர். அப்போது இதைத் தடுக்க முயன்ற விமான ஊழியர்களையும் தாக்க முயன்றார். இதையடுத்து விமானிகள், அந்த விமானத்தை பாஸ்டன் … Read more

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவமழையினால் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி பெருகியுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்த ஆண்டு இதுவரை சுமார் 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; சுமார் 9 பேர் மரணமடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. குறிப்பாக … Read more

22 ஆண்டுக்குப் பிறகு 68 வயதில் குடும்பத்துடன் சேர்ந்த பெண்

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த ஒரு பெண்ணை (68) போலீஸார் மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு தனது சொந்த ஊர், தனது கணவர், மகன், உறவினர்களைப் பற்றிய தகவலை கூறினார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினரும் சமூக சேவை கண்காணிப்பாளரும் அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை சேகரித்தனர். அப்போது, அந்த பெண் 22 ஆண்டுகளுக்கு முன்வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. அதன்பிறகு மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள … Read more

நகராட்சி நிர்வாகப் பணி நியமன முறைகேட்டில் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும்: இபிஎஸ்

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழக பொறுப்பு டிஜிபி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் eடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்’ என்று ஊரை அடித்து, உலையில் போடும் இந்த திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த … Read more

ஜெய்ப்பூர் | ஓட்டலில் பணம் தராமல் தப்பிய 5 பேர் நெரிசலில் சிக்கி கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மவுன்ட் அபு அருகில் உள்ள சியாவாவில் உள்ள ‘ஹேப்பி டே’ ஓட்டலுக்கு குஜராத்தை சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள் சாப்பிட வந்தனர். அவர்கள் பல்வேறு அறுசுவை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஆனால் பில் தொகை ரூ.10,900-ஐ செலுத்தாமல், கழிப்பறைக்கு செல்வது போல் ஒருவர் பின் ஒருவராக உணவகத்தில் இருந்து தப்பிச் சென்றனர். இதற்கிடையில் என்ன நடக்கிறது என்பதை ஓட்டல் உரிமையாளரும் பணியாளரும் உணர்ந்தனர். அவர்களின் கார், குஜராத் – ராஜஸ்தான் எல்லையான அம்பாஜியை … Read more

சிபிஆர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை: போலீஸ் விளக்கத்தில் உடன்பாடு இல்லை – வானதி சீனிவாசன்

கோவை: கோவை டவுன் ஹால் பகுதியில் குடியரசு துணைத் தலைவர் பாதுகாப்பு வளையத்திற்குள் இளைஞர்கள் நுழைந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கொடுத்த விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை சாய் பாபா காலனி பகுதியில் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று நடந்த அடையாள அட்டைகள் வழங்கும் விழாவில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய … Read more

2 மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்த பிரசாந்த் கிஷோருக்கு ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் பெயர் 2 மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்​தவரும் தேர்​தல் வியூக வகுப்​பாள​ரு​மான பிர​சாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற அரசி​யல் கட்​சியை தொடங்கி உள்​ளார். வரும் நவம்​பரில் நடை​பெறவுள்ள பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அவரது கட்சி போட்​டி​யிடு​கிறது. இந்​நிலை​யில், பிர​சாந்த் கிஷோர் பெயர், பிஹார் (கர்​காஹர்) மற்​றும் மேற்கு வங்​கம் (கொல்​கத்​தா) ஆகிய 2 மாநில வாக்​காளர் பட்​டியலில் … Read more

குடியரசு துணைத் தலைவர் இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார். இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க இன்று மாலையில் மதுரை வருகை தந்தார். அதனையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக இன்று மாலை 6.30 மணியளவில் கோயிலில் அம்மன் சன்னதி வாசலுக்கு காரில் வருகை தந்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் … Read more