மத்திய அரசு திட்டங்களால் பயன் அடைந்த மக்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

புதுடெல்லி: மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப் பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயன் அடைந்த பொதுமக்களுடன், இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டம் , பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டம்,  ஊட்டச்சத்து இயக்கம், பிரதமரின் மகப்பேறு உதவித்திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் தாக்கம் குறித்து, பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளதாக மத்திய … Read more

நல்லாட்சி, ஏழைகள் நலன் குறித்து எங்களது குறிக்கோளை பூர்த்தி செய்ய உறுதி பூண்டுள்ளோம்- பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி தமது நமோ செயலி மற்றும் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த எட்டு ஆண்டுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பயன்பட்டது.  சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலன் என்ற எங்களது குறிக்கோளை பூர்த்தி செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.  நமோ செயலியில் உள்ள முன்னேற்றப்பயணம் பற்றிய பிரிவு, உங்களை இந்த வளர்ச்சிப் … Read more

அமைச்சர் பதவி: தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் என்றும் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன். எனக்கு பதவி வழங்க வேண்டும் என தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்க … Read more

எடியூரப்பாவின் போராட்ட குணத்தை சிறுவயது முதலே பார்த்து வருகிறேன்: விஜயேந்திரா பெருமிதம்

ஹாசன்: ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் சிவக்குமார சுவாமிஜியின் 115-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- கர்நாடக மாநிலம் பல முதல்-மந்திரிகளை கண்டுள்ளது. அதில் எடியூரப்பா ஒரு தனித்துவமானவர். கர்நாடகத்தில் பா.ஜனதாவின் ஆட்சி சிறப்பாக உள்ளது. விவசாயிகள், தலித் மக்களின் துயரத்தை துடைத்தவர் எடியூரப்பா. அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் போராட்ட குணத்தை சிறுவயது முதல் இருந்தே பார்த்து வருகிறேன். அவர், … Read more

தொடர்ந்து அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: திருப்பதியில் மீண்டும் நேரம் ஒதுக்கீடு முறையில் தரிசன டோக்கன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பதியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் கடந்த 2 நாட்களாக தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கும் வைகுண்டம் காம்ப்லக்ஸ் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. கோவிலுக்கு வெளியே வெங்கமாம்பா கோவில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரவு, பகலாக வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். … Read more

பிரேசில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

ரியோ டி ஜெனிரோ,: பிரேசில் நாட்டில் வடகிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின. வெள்ளத்திற்கு அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த பெர்னாம்புகோ மாகாணத்தின் தலைநகர் ரீசிப் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். … Read more

சென்னையில் சொத்துவரி உயர்வுக்கு அனுமதி- மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து கேள்வி நேரத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற நேரமில்லா நேரத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர். பின்னர் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு கவுன்சிலர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. முக்கியமாக சென்னையில் சொத்துவரி உயர்வுக்கு மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி … Read more

திருப்பதி உண்டியலில் வசூலான வெளிநாட்டு பணம் இ.டெண்டர் மூலம் ஏலம்

திருப்பதி: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளில் இருந்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணம் அடுத்த மாதம் (ஜூன்) 16 மற்றும் 17-ந்தேதிகளில் இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. இதர விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் … Read more

நேபாளம் விமான விபத்து – இதுவரை 21 உடல்கள் மீட்பு

காத்மாண்டு: நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் நேற்று காலை 9.55 மணிக்கு 4 இந்தியர் உள்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமானது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் ரேடார் பார்வையில் இருந்து மறைந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் விமானம் இமயமலையின் பனிபடர்ந்த பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. … Read more

தொலைதூர கல்வியை மீண்டும் தொடங்க வேண்டும்- கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை

சென்னை: திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வியை மீண்டும் தொடங்க பல்கலைக்கழக மானிய குழுவிடம் கவர்னர் முறையிட வேண்டும். பெண் கல்வி வளர வேண்டும் என்பதே திராவிட மாடல். இதில் கவர்னருக்கும் மாற்று கருத்து இருக்காது. இடைநின்ற மாணவர்கள் மீதமுள்ள படிப்பை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தொடர கவர்னர் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.