இந்த வருட அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? :

சென்னை இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வருட அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.  ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நாளை  முதல் தொடங்கி நடைபெற உள்ளதாகவும், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 11-ந்தேதி முதல் ஆரம்பித்து நடத்தப்பட … Read more

கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் நன்றி

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.  பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கனமழை ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒரு சில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.  பல்வேறு அமைப்பினர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு … Read more

அமைச்சர்கள் உள்ளிட்ட 10 பாஜக எம்பிக்கள் ராஜினாமா

டில்லி மத்திய அமைச்சர் உள்ளிட்ட 12 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  அண்மையில் சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று இதில், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் நீங்கலாக மீதமுள்ள மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. மீதமுள்ள சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட சில பாஜக எம்.பிக்கள், சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டனர். இவர்களில் … Read more

மீட்பு பணிகளில் தொய்வு… படகுகளில் மீட்கப்பட பணம் வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு…

சென்னையில் மழை ஓய்ந்து சுமார் 40 மணி நேரம் ஆனநிலையிலும் சென்னையின் மையப்பகுதியான அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணி முதல் வேளச்சேரி மற்றும் சென்னையின் புறநகர் பகுதியான பெரும்பாக்கம் வரை வெள்ள நீர் வடியாமல் உள்ளது. தவிர இந்த பகுதியில் உள்ள பல குடியிருப்புகளில் உணவு மற்றும் குடிநீருக்கு வழியில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மழை குறித்து கடலோர மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த போதும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்னேற்பாடாக நிவாரண … Read more

4 மாவட்ட மாணவர்களுக்கு +1, +2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்ந்துவரும் நிலையில் இம்மாவட்ட +1, +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் ஒரே மாதிரியான கேள்வித்தாளுடன் நடத்தப்பட உள்ள இந்த தேர்வில் +1 மற்றும் +2 வகுப்பிற்கான தேர்வு நாளையும் (7-12-2023) பத்தாம் வகுப்பிற்கான தேர்வு 11ம் தேதியும் துவங்குவதாக இருந்தது. சென்னையில் மழை வெள்ள பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் சென்னை மாவட்ட பள்ளி … Read more

பிரதமரிடம் ரூ. 5000 கோடி புயல் இடைக்கால நிவாரணம் கோரும் தமிழக முதல்வர்

சென்னை மிக்ஜம் புயல் இடைக்கால நிவாரணமாக ரூ.5000 கோடி அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தின் வட மாவட்டங்களில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாகக் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். தமிழகத்தில் ‘மிக்ஜம்’ புயல் … Read more

பல்லாயிரம் கோடி ரூபாய் கொட்டி உயர்த்திய போதும் தனது உயரத்தை வெளிப்படுத்திய சென்னை

1996 ஜீன் மாதம் சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களில் 70 செ.மீ மழை பதிவானது. ஜீன் 14 ஒரே நாளில் 35 செ.மீ. மழை பதிவாகி கோடை காலத்தில் அதிலும் ஜீன் மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை என்று வரலாற்றில் பதிவானது. கோடையில் சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகள் எதுவும் திறக்கப்படாத நிலையிலும் சென்னையின் மையப்பகுதியான ஜெமினி மேம்பாலம் முதல் நகரின் அனைத்து தாழ்வான பகுதிகளும் தண்ணீரில் தத்தளித்தது. 27 ஆண்டுகள் ஆன நிலையில் ஆட்சிகள் … Read more

ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுட்டுக் கொலை : ராஜஸ்தானில் முழு அடைப்பு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேவா  தலைவர் சுட்டுக கொல்லப்பட்டதை அடுத்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த சுக்தேவ் சிங் கொஹமெதி ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் ஆவார் . ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து பிரிந்து 2015ம் ஆண்டு ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பை இவர் … Read more

564 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் 564 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 564 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், … Read more

நாளை தெலுங்கானா முதல்வராகப் பதவி ஏற்கும் ரேவந்த் ரெட்டி

டில்லி நாளை தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்க உள்ளார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உதயமானது முதல், அங்கு பி.ஆர்.எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் 2 முறை முதல்வராகப் பதவி வகித்தார். தெலுங்கானாவின் 3- ஆவது சட்டசபைத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. அன்று 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் காங்கிரஸ் 64 தொகுதிகளில் … Read more