இந்தியா கூட்டணியின் நாளைய ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

டில்லி நாளை நடைபெற இருந்த இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் 5 மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி ஒத்தி வைக்கப்பட்டஹ்டு.  இந்ந்திலையில்  ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன. இதில் 4 மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கொண்டிருந்தபோதே, “இந்தியா” கூட்டணியின் கூட்டம் டிசம்பர் 6-ந் தேதி நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அன்று வெளியான தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், … Read more

மிக்ஜம் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது

அமராவதி மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திராவில் கரையை கடந்தது. கடந்த 27 ஆம் தேதி வங்கக்கடல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம் என பெயரிடப்பட்டது. இந்த புயலால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மிக்ஜம் புயல் சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு … Read more

நமீதா வீட்டுக்குள் வெள்ளம் : இரு குழந்தைகளுடன் தவிப்பு

சென்னை மிக்ஜம் புயல் காரணமாகச் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நடிகை நமீதா  இரு குழந்தைகளுடன் தவிக்க நேர்ந்துள்ளது. நேற்று முன் தினம் மாலையிலிருந்து நேற்று இரவு வரை மிக்ஜம் புயல் காரணமாகச் சென்னையில் விடாது மழை பெய்தது. இந்த கனமழை காரணமாகச் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் அதிகரிப்பால் பள்ளிக்கரணை நாராயண புரம் ஏரியின் கரை உடைந்தது.  எனவே அதற்கு அருகில் இருக்கும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இன்னும் பள்ளிக்கரணை, அதன் அருகில் உள்ள துரைப்பாக்கம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. துரைப்பாக்கம் எக்ரட் பார்க் குடியிருப்பிலும் வெள்ளம் புகுந்து ஆறு … Read more

அனைத்து புறநகர் ரயில்களும் நாளை முதல் இயக்கம்

சென்னை நாளை முதல் அனைத்து புறநகர் ரயில்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்து பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த தொடர் மழையால், பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, ரயில் சேவை முடங்கியது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் தடத்தில் பேசின்பாலம் – வியாசர்பாடி இடையே 14-வது பாலத்தில் மழைநீர் … Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு

சென்னை  தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்தபோது, செந்தி பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  பிறகு, நீதிமன்ற காவலில் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதிருந்து செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்த … Read more

தலைநகர் சென்னையில் 80% இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது

சென்னை சென்னை நகரில் 80% இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக்ஜம் புயலால் சென்னையில் கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நேற்று இரவு மிக்ஜம் புயல் சென்னையைக் கடந்த பிறகு மழையின் தீவிரம் குறைந்து இன்று காலையில் இருந்து வெயில் தலை காட்டத்தொடங்கியது. இதனால் சென்னை வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. நகரில் மீட்பு … Read more

‘மிக்ஜாம்’ புயல் : சென்னையில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியது… ரயில், விமானம், பேருந்து சேவை பாதிப்பு…

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து 20 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை சென்ட்ரல் ரயில்கள் நிலையம் வரவேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது தவிர சென்ட்ரலில் இருந்து கோவை, மைசூரு, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு இணையாக அங்கிருந்து வரவேண்டிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையும் … Read more

பெருங்களத்தூரில் சாலையில் ஊர்ந்து சென்ற முதலை… குடியிருப்புகளில் விஷ ஜந்துக்கள் புகுந்தால் தொடர்பு எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி… வீடியோ…

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் நேற்றிரவு சென்னை பெருங்களத்தூரில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகே முதலை ஒன்று சாலையை கடந்து சென்றது அந்தப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து … Read more

சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது ‘மிக்ஜாம்’ புயல்… புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட வாய்ப்பு…

மிக்ஜாம் புயல் இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The cyclone is now 110kms East-Northeast of #chennai #Michaungcyclone is to further intensify into a severe cyclonic storm by noon today – it is moving north westwards #ChennaiRain & winds to continue till tonight…brave for more.. stay safe … Read more

சென்னையை நெருங்கும் ‘மிக்ஜாம்’ புயல் – பலத்த காற்றுடன் கனமழை – சாலைகளில் வெள்ளம் – சுரங்கப்பாதைகள் மூடல்!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று குறைந்த வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை உள்பட 3 மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனத்த மழை காரணமாக, சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.  மேலும் சென்னையில் உள்ள 14  சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், அவை மூடப்பட்டுஉள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற … Read more