விமானத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவளித்த பயணி கைது…!

கொச்சியில் இருந்து பெங்களூரு வழியாக போபாலுக்கு சென்ற ஏர் ஏசிய விமானத்தில், 21 வயது பெண் பணியாளர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவளித்த பயணியை, போலீசார் கைது செய்தனர். பெங்களூரு விமானநிலையத்தில் பயணிகள் இறங்கும்போது விமானத்தின் பின் இருக்கைக்கு அருகே நின்று கொண்டிருந்த பெண் ஊழியரிடம், பின்புறத்தில் வந்து பயணி ஒருவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். இதையடுத்து, சக பயணிகள் உதவியுடன் பெண் ஊழியர் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிவரும் … Read more

இதுவரை பார்க்கப்படாத சூரியனின் மேற்பரப்பின் விசித்திரமான புகைப்படங்களை வெளியிட்டது நாசா..!

இதுவரை பார்க்கப்படாத சூரியனின் மேற்பரப்பின் விசித்திரமான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஹவாயில் உள்ள மவ்ய் தீவில் வைக்கப்பட்டிருக்கும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியின் உச்சம் காரணமாக சூரியன் பூமிக்கு அருகாமையில் வரும் போது இந்தப் படம் எடுக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் சூரியனின் மேற்பரப்பில் காந்தப் புலம், இருண்ட புள்ளிகள் போன்றவை தெளிவாகக் காணப்படுகின்றன. மேலும் சூடான பிளாஸ்மா சூரியனின் மேற்பரப்பிலும், கீழ்பரப்பிலும் பாயும் நிகழ்வும் படத்தில் காணக் … Read more

அல்ஜீரியா நாட்டு பெண்ணை மணம் முடித்த புதுச்சேரி இளைஞர்…!

புதுச்சேரியை சேர்ந்த இளைஞருக்கும், அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. புதுச்சேரியை சேர்ந்த கணினி பொறியாளரான அபிலாஷ் நெதர்லாந்து நாட்டில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணி புரிந்து வரும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த பாத்திமாவும், அபிலாஷும் காதலித்து வந்தனர். மணமகனின் பெற்றோர் சம்மதத்துடன் புதுச்சேரி வள்ளலார் அவையில் இன்று திருமணம் நடைபெற்றது. உலகப் பொதுமறை திருக்குறளின் மீதும், வள்ளலாரின் திருமுறையின் மீதும் மணமக்கள் திருமண உறுதிமொழி ஏற்றனர். திருமண விழாவில் மணமகன் அபிலாஷின் … Read more

தமிழ் மொழி, இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி – பிரதமர் மோடி

உலகின் பழமையான மொழியான தமிழ், இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான், பப்புவா நியு கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பிய அவரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமையில் ஏராளமானோர் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர், பப்புவா நியு கினியாவில் டாக் பிஸின் மொழியில் திருக்குறளின் மொழி பெயர்ப்பு புத்தகத்தை வெளியிட்டது தமக்குக் கிடைத்த பெருமை என்றார். … Read more

உத்தரகாண்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்… டெல்லியிலிருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர்

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். டெல்லியிலிருந்து காணொளி வாயிலாக பச்சைக் கொடியை பிரதமர் அசைத்ததும் வந்தே பாரத் ரயில் தனது பயணத்தை துவங்கியது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகள் பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றுவதுடன், மக்களின் பயண நேரத்தை வெகுவாக குறைப்பதாகவும் தெரிவித்தார். டேராடூன் – டெல்லி இடையிலான 314 கிலோமீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 45 நிமிடங்களில் … Read more

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட 55,982 சிம்கார்டுகள் முடக்கம்…!

தமிழ்நாட்டில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வாங்கப்பட்ட 56 ஆயிரம் சிம்கார்டுகள் முடக்கப்பட்டன. நாடு முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிய நடவடிக்கை எடுத்த போது, பலர் போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகள் வாங்கி பயன்படுத்தியதை மத்திய தொலை தொடர்பு துறை கண்டுபிடித்தது. இதையடுத்து முக அமைப்பு கண்டறியும் மென்பொருள் தொழில்நுட்பத்தின் மூலம் தரவுகளை ஆய்வு செய்ததில், தமிழகத்தில் சுமார் 55 ஆயிரத்து 983 சிம்கார்டுகள் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டதை கண்டுபிடித்து அதிகாரிகள் … Read more

கொலம்பியாவில் படகில் கடத்திச் செல்லப்பட்ட 21 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல்!

கொலம்பியா அருகே அதிவேகப் படகில் கடத்திச் செல்லப்பட்ட 21 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கொலம்பிய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ரோந்துப் பணியில் ஈடுபட்டது. அப்போது டொமினிகன் குடியரசை நோக்கி அதிவேகமாகச் சென்ற படகை ஹெலிகாப்டர் விரட்டிச் சென்று இடை மறித்தது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட படகை பின்தொடர்ந்து வந்த கொலம்பிய கடற்படை வீரர்களும் அந்தப் படகை சுற்றி வளைத்தனர். படகினை சோதனை … Read more

வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை சிறைபிடித்த மக்கள்…!

சென்னையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு வீடு புகுந்து பாலியல் தொல்லை அளித்ததாக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் தப்பியோடியதால் துணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவு நேரத்தில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர், வீட்டிற்குள் பதுங்கியிருந்த அதேப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷை பிடித்தனர். பொதுமக்கள் உதவியுடன் அவனது கை, கால்களை கட்டி பட்டினம்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கஞ்சா போதையில் இருந்த விக்னேஷை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், … Read more

சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய கப்பல்.. பெரும் போராட்டத்துக்குப் பின் மீண்டும் நீரோட்டத்தில் விடப்பட்டது

எகிப்தின் சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டி நின்ற ஹாங்காங் கப்பல் பெரும் போராட்டத்துக்குப் பின் மீண்டும் நீரோட்டத்தில் விடப்பட்டது.  623 அடி நீளமுள்ள சின் ஹாய் டோங் என்ற அந்த சரக்கு கப்பல், சவூதி அரேபியாவின் தூபா துறைமுகத்தில் இருந்து சென்று கொண்டிருந்தது. சூயஸ் கால்வாய் வழியாக செல்கையில் திடீரென தரைதட்டவே, அதன் பின்னால் வந்த 4 கப்பல்கள் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டன. இதையடுத்து 3 இழுவை படகுகள் வரவழைக்கப்பட்டு மீண்டும் அக்கப்பல் நீரோட்டத்தில் விடப்பட்டது. … Read more

“கடந்த 9 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது” – பிரதமர் மோடி

இந்திய விளையாட்டுத் துறையில் கடந்த 9 ஆண்டுகளில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி கூறினார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 3வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார். வரும் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து 4 ஆயிரத்து 570 மாணவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பலனாக … Read more