தாக்குதல் நடத்த ரஷ்யா அனுப்பிய 36 டிரோன்கள் ஒரே நாள் இரவில் சுட்டு வீழ்த்தி உக்ரைன்..

ராணுவ நிலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா அனுப்பிய ஈரானிய தயாரிப்பு 36 டிரோன்களை ஒரே நாள் இரவில் சுட்டுவீழ்த்தி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் தலைநகர் கீவின் வான்பரப்பில் பறந்த டிரோன்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சிகளையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது. அக்காட்சியில், டிரோன்கள் தாக்குதலுக்கு ஆளாகி தீப்பிழம்பாய் விழும் காட்சிகள் உள்ளன. Source link

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் சென்றடைந்தார் முதலமைச்சர்..

தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்துகொண்டு ஜப்பான் சென்றடைந்தார். சிங்கப்பூரில் அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்து பேசிய முதலமைச்சரிடம் சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சண்முகம் கோரிக்கை விடுத்தார். அது பற்றி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்ததாக தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள … Read more

2,000 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையை பரிசோதித்தது ஈரான்…!

2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஈரான் பரிசோதித்துள்ளது. கெய்பர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, ரேடார் சாதனங்கள் மற்றும் பிற பாதுகாப்பு தளவாடங்களின் பார்வையில் படாமல் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதென்று  ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முகம்மது ரெஜா கரே அஸ்டியானி தெரிவித்துள்ளார்.    Khoramshahr 4  ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமே கெய்பர் ஏவுகணை என்றும்,  அது ஆயிரத்து 500 கிலோ வெடிப் … Read more

முதன்முறையாக இரவு நேரத்தில் விக்ராந்த் போர் கப்பலில் மிக் 29-கே விமானத்தை தரையிறக்கி சோதனை…!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில், முதன்முறையாக இரவு நேரத்தில் மிக் 29 கே போர் விமானத்தை தரையிறக்கி, மற்றுமொரு வரலாற்று மைல் கல்லை எட்டியுள்ளதாக கடற்படை பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்த சவாலான இரவு தரையிறங்கும் சோதனையானது, விக்ராந்த் குழுவினர் மற்றும் கடற்படை விமானிகளின் உறுதியையும், திறமையையும், நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக இந்திய கடற்படை பாராட்டு தெரிவித்துள்ளது.  Source link

”சிங்கப்பூரிடம் முதலீட்டாளர்களை கேட்பது நாட்டை அவமதிப்பதாக உள்ளது..” – சீமான்..!

தமிழகத்தின் இரண்டு மாவட்டங்கள் அளவு கொண்ட சிங்கப்பூரிடம் முதலீட்டாளர்களை கேட்பது, நாட்டை அவமதிப்பதாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆறு விதமான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று முதலமைச்சர் கூறியுள்ளதைப் பற்றி  தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  Source link

மைசூர் புலி என்றழைக்கப்படும் திப்பு சுல்தானின் வாள் ரூ.140 கோடிக்கு ஏலம்…!

மைசூர் புலி என்றழைக்கப்படும் திப்பு சுல்தானின் வாள் லண்டனில் 140 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள கலைப்பொருட்களை ஏலம் விடும் போன்ஹாம்ஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட 7 மடங்கு அதிக விலைக்கு வாள் ஏலம் போனதாக நிறுவனத்தின், இஸ்லாமிய மற்றும் இந்திய கலைத் தலைவர் ஆலிவர் ஒயிட் தெரிவித்துள்ளார். 18 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற போரில் திப்பு கொல்லப்பட்ட பிறகு, அரண்மனையின் தனிப் பகுதியில் வாள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த … Read more

கார் பார்க்கிங்கில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை மீது கார் ஏறியதில் பரிதாபமாக உயிரிழப்பு…!

ஹைதரபாத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை மீது கார் ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் சிலர் ஹைதரபாத்தின் ஹையத் நகரில் தங்கியபடி கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் கவிதா என்பவர் தனது 3 வயது மகளை அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்-கில் தூங்க வைத்துவிட்டு கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தார். வீட்டிற்கு காரில் திரும்பிய குடியிருப்புவாசி ஒருவர், தனது பார்க்கிங்-கில் குழந்தை படுத்திருப்பதை கவனிக்காமல் காரை … Read more

வீட்டில் காதலி போராட்டம்… கோயிலில் மற்றொரு திருமணம்… மாப்பிள்ளையை மடக்கிய போலீஸ்… காதலால் கவிழ்ந்த எம்.ஏ., பி.எட்

10 ஆண்டு கால காதலியை திருமணம் செய்த 3-ஆவது நாளிலேயே, வேறொரு பெண்ணை கோயிலில் வைத்து திருமணம் செய்தவரை மணக்கோலத்திலேயே கைது செய்துள்ளது போலீஸ். கைவிட்டுச் சென்ற கணவனை விடிய விடிய தர்ணா நடத்தி அந்தப் பெண் கம்பி எண்ண வைத்துள்ளார். வாசலில் வாழைத்தோரணம் கட்டி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வீட்டின் முன்பு ஒற்றை ஆளாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட இவர் தான் கடலூர் மாவட்டம் எல்.என்.புரத்தைச் சேர்ந்த ரம்யா. தன்னை 10 ஆண்டுகளாக காதலித்து … Read more

ரொமேனியாவில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய டி ஷர்ட்…. 5 லட்சம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் வடிவமைப்பு…!

ரொமேனியா நாட்டில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய டி சர்ட் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 357 அடி நீளமும், 241 அடி அகலமும் கொண்ட அந்த டி சர்ட், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மறுசுழற்சி செயப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ரொமேனியா நாட்டின் தேசிய கொடியின் நிறத்தில், மறுசுழற்சியை ஊக்குவிக்கும் வகையில் அந்த ஆடை தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சாதனை படைத்துள்ள அந்த டி சர்டின் துணியால், 10 ஆயிரம் ஆடைகள் செய்து … Read more

“உங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் அதே பாதுகாப்பை மற்ற குழந்தைகளுக்கும் வழங்கவேண்டும்..” பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மதுரை ஆட்சியர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்…!

உங்கள் குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பான வாகனங்களில் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களோ அதேபோன்ற பாதுகாப்பை மற்றவர்களின் குழந்தைகளுக்கும் வழங்கவேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தினார். பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார். வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள், முதலுதவி பெட்டிகள் உள்ளிட்டவை முறையாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். ஒரு வாகனத்தில் சிறிய ஓட்டை இருப்பதை பார்த்த ஆட்சியர், சென்னையில் … Read more