நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அமைச்சர் ராஜ்நாத்சிங்!

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். 970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அக்கட்டிடத்தை வருகிற 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். ஆனால் அக்கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 எதிர்க்கட்சிகள், விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தெலுங்குதேசம் உள்ளிட்ட 25 … Read more

ஈரப்பத அளவு அதிகமாக இருந்ததால் நெல் கொள்முதல் செய்ய மறுப்பு.. ஊழியரை மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்..!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், நெல்லின் ஈரப்பத அளவு அதிகமாக இருந்ததால் கொள்முதல் செய்ய மறுத்த ஊழியரை, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஒருமையில் பேசி தாக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பேரண்டூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரான துளசிராமன் என்பவர், ஊத்துக்கோட்டை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய வந்துள்ளார். நெல்லின் ஈரப்பத அளவு 20 சதவீதத்திற்குள் இருக்க வேண்டுமென்ற பட்சத்தில், 23 சதவீதமாக இருந்ததால் ஊழியர்கள் நெல்லை கொள்முதல் … Read more

இந்திய எல்லையையொட்டி கிராமங்களை அமைக்கும் சீனா..!

உத்தரகாண்ட் மாநிலத்தையொட்டிய சர்வதேச எல்லையில் கிராமங்களை உருவாக்கி தனது குடிமக்களை சீனா குடியேற்றி வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சீனாவுடன் சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிற்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த எல்லையில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 250 குடியிருப்புகளை கொண்ட கிராமம் ஒன்றை சீனா உருவாக்கி வருவதாகவும், எல்லையை ஒட்டி இதே போன்ற மேலும் 400 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய … Read more

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட்டின் நினைவு தினம் அனுசரிப்பு!

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதன் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மினியாபோலிஸில் உள்ள குடியிருப்பாளர்கள் அவரது தற்காலிக நினைவிடத்தில் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர். ஃபிலாய்ட்டை கைது செய்தபோது போலீசார் அவரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை நெறித்ததில் ஃபிலாய்ட் உயிரிழந்தார். ஃபிலாய்ட் கொலை செய்யப்பட்டதையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மிக போராட்டங்கள் எழுத்தன.  Source link

நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு..!

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காதது, குடியரசுத் தலைவரின் மதிப்பை குறைப்பது மட்டுமன்றி, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல் என பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என மறுப்பு தெரிவித்தது. பொதுநல மனு விளம்பர நோக்கத்திற்காக தொடுக்கப்பட்டிருப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் … Read more

XBB மரபணு மாற்றப்பட்ட கோவிட் தொற்று உச்சத்தை எட்டி சீனாவை ஆட்டிப் படைக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து..!

புதிய மரபணு மாற்றப்பட்ட கோவிட் XBB சீனாவை அச்சுறுத்தி வருகிறது. வாரம்தோறும் ஆறரைக் கோடி பேர் வரை இந்த புதிய வகை தொற்றால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஜூன் இறுதிக்குள் இது உச்சத்தை எட்டி சீனாவை ஆட்டிப் படைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்காக சீன அரசு இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய வகை தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் முதல் சீனா ஒமிக்ரான் மரபணு மாற்ற XBB வைரஸ் தொற்றின் பரவலை … Read more

நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்ய வைப்பர் ரோவர் விண்கலத்தை அனுப்புகிறது நாசா..!

நிலவின் மேற்பரப்பில் நீர் உள்ளதாக என்பதைக் கண்டறிய நாசா ரோவர் விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளது. 1972 க்குப் பிறகு முதன்முறையாக விண்வெளி வீரர்களை சந்திரனுக்குத் திருப்பி அனுப்ப நாசாவின் ஆர்ட்டெமிஸ் மிஷன் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. நாசாவின் VIPER எனப்படும் ரோவர் விண்கலத்தை அடுத்த ஆண்டு நிலவின் தென்துருவத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோவர் மூலம் நிலவின் மேற்பரப்பில் பனி அல்லது நீர் இருப்பு குறித்து ஆராயப்படும் என நாசா குறிப்பிட்டுள்ளது. … Read more

”கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் கள்ளை அமல்படுத்த வேண்டும்..” – கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன்..!

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் கள்ளை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்கு நாட்டின் பாரம்பரிய வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பங்கேற்று நடனத்தை கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள் அமலுக்கு வரும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு சந்து கடைகள் அகற்றப்படும் என்றார். Source link

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை 28ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி… ஹோமம், பூஜைகளுடன் காலையில் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி…!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். மகாத்மா காந்தி சிலை அருகில் காலை 7.30 மணிக்கு சிறப்புபூஜைகள் நடைபெற உள்ளன.  தமிழ்நாட்டின் சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்குகின்றனர். இந்த செங்கோல் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு  மக்களவையின் உள்பகுதியில் சபாநாயகரின் இருக்கை அருகே நிறுவப்படுகிறது. இரண்டு குறும்படங்கள் திரையிடல், நினைவு நாணயம் தபால் தலை வெளியீடு, நாடாளுமன்றத்தை கட்டிய தொழிலாளர்களை கௌரவப்படுத்துதல், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற … Read more

இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மீது கார் மோதியதால் பரபரப்பு…. அதிவேகமாக வாகனம் ஓட்டிய இளைஞரை கைதுசெய்து விசாரணை…!

இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தின் நுழைவு வாயில் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று, லண்டன் நகரிலுள்ள டவுனிங் தெருவில் அதிவேகமாக வந்த கார், பிரதமர் ரிஷி சுனாக் தன் குடும்பத்தினருடன் வசித்துவரும் ஒயிட் ஹால் நுழைவு வாயிலின் முதலாவது கேட் மீது மோதியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக காரை சுற்றிவளைத்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென உறுதிசெய்துள்ள அதிகாரிகள், பிரதமர் இல்லம் மீது வாகனத்தை மோதவிட்டு குற்றமிழைக்கும் வகையில் … Read more