”மக்கள் பேராபத்திற்கு ஆளாகவோ, கொல்லப்படவோ செயற்கை நுண்ணறிவு காரணமாகலாம்..” கூகுள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷமிட் எச்சரிக்கை…!

எதிர்காலத்தில் மக்கள் பேராபத்திற்கு ஆளாகவோ, கொல்லப்படவோ ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு காரணமாகலாம் என கூகுள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷமிட் எச்சரித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி தற்போது பேசுவது கற்பனை கதை போல தோன்றினாலும், எதிர்காலத்தில் உண்மையாக வாய்ப்புள்ளதாக கவலை தெரிவித்தார். தீயவர்கள் இதனை தவறாக பயன்படுத்தாமல் தடுக்க ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். எலான் மஸ்க் … Read more

அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பள்ளி துப்பாக்கிச்சூட்டின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பள்ளியில் 21 பேர் பலியான துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்தாண்டு மே 24ம் தேதி உவால்டேவில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். அமெரிக்க பள்ளியில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, பொதுமக்கள் பலர் ஒன்று கூடி … Read more

இன்று டி.எம்.எஸ். நினைவு நாள்….!

கம்பீரமான குரலில் தெளிவான உச்சரிப்புடன் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் டி.எம்.சௌந்தர்ராஜன். உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த பாடகர் டிஎம்எஸ்-சின் நினைவுநாளில், அவரைப் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு இதோ உங்களுக்காக.. டிஎம்எஸ்-சின் பக்திச்சுவை ததும்பும் பாடல்களைக் கேட்காதோர் இருக்க முடியாது… இனிமையான குரலில் கேட்போரை லயிக்கச் செய்யும் குரல் டிஎம்எஸ் உடையது. 1950களில் மந்திரிகுமாரி படத்தில் எம்ஜிஆருக்கு அவர் பாடிய பாடல் திரையுலகினரைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அதன்பின்னர், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை 25 ஆண்டுகள் … Read more

பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்த ஆடைகள்!

சிங்கப்பூர் பயணத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்த ஆடைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. வழக்கமாக அரைக்கை சட்டை மற்றும் வேட்டி அணியும் முதலமைச்சர், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும்போது முழுக்கை சட்டை, பேண்ட் மற்றும் கருப்புக் கண்ணாடி அணிந்து பயணம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கோட், சூட், டை அணிந்து தொழில் முதலீடுகள் தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்தார். தமிழ் அமைப்புகள் கொடுத்த வரவேற்பில் பட்டு கரை வேட்டி, தோளில் துண்டு, அரக்கு நிற கலர் சட்டை … Read more

காலாவதியான உணவுப் பொருட்களை விற்ற ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கின் மீது நடவடிக்கை!

சேலம் ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கின் மீது காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிவில் வழக்கு தொடரப்படும் என மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார். இந்த திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது பால், பிரட், ஐஸ்கிரீம், சிப்ஸ், கேக், பாப்கார்ன், உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Source link

தமிழுக்கு புகழாரம் சூட்டிய மோடி….!

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்று புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியனின் மொழி என்று குறிப்பிட்டார். ஜப்பான், பபுவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று காலை நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த ஏராளமானோர் தேசியக் கொடியை அசைத்தும், மலர்களைத் தூவியும் … Read more

சூடானில் உள்நாட்டு யுத்தத்தால் 13 லட்சம் பேர் புலம்பெயர்ந்தாக தகவல்..!

சூடான் உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் ஒரு 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருப்பதாக ஐநா புலம்பெயர்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சூடானில் ராணுவத்திற்கும் அதன் துணை ராணுவப்படையினருக்கும் ஏற்பட்ட மோதலால் கடும் யுத்தம் நீடிக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்து அகதிகளாக அருகில் உள்ள நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர், 190 குழந்தைகள் உட்பட 863 அப்பாவி மக்கள் இந்தப் போரால் உயிரிழந்துவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். Source link

மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கிய வன்முறைச் சம்பவங்கள்.. போலீசார் குவிப்பு..!

மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன. இம்பால் மேற்கு மாவட்டம் கடங்காபாத்தில் மூன்று இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சில ஆயுதமேந்திய விஷமிகள் குன்றில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.இதில் ஒருவர் விரல் சேதம் அடைந்தது. எல்லைப் பாதுகாப்புப் படையினரும், மணிப்பூர் போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார் Source link

சூடானில் உள்நாட்டு யுத்தத்தால் 13 லட்சம் பேர் புலம்பெயர்ந்தனர் என்று தகவல்..!

சூடான் உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் ஒரு 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருப்பதாக ஐநா புலம்பெயர்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சூடானில் ராணுவத்திற்கும் அதன் துணை ராணுவப்படையினருக்கும் ஏற்பட்ட மோதலால் கடும் யுத்தம் நீடிக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்து அகதிகளாக அருகில் உள்ள நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர், 190 குழந்தைகள் உட்பட 863 அப்பாவி மக்கள் இந்தப் போரால் உயிரிழந்துவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். Source link

தரையிறங்கியவுடன் மீண்டும் வானில் பறந்த இண்டிகோ விமானம்.. பயணிகள் பதற்றம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானம் உடனே மீண்டும் வானில் பறக்கத் தொடங்கியது. இதனால் சில நிமிடங்களுக்கு விமானத்தில் இருந்த பயணிகள் குழப்பமடைந்தனர். திங்கள்கிழமை இரவு சுமார் 100 பயணிகளுடன் சண்டிகரிலிருந்து அகமதாபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சர்தார் படேல் சர்வதே விமான நிலையத்தின் ஓடுபாதையில் அன்றிரவு 8.45 மணியளவில் தரையிரங்கியது. இரவு 9.15 மணிக்கு தரையிறங்க வேண்டிய அந்த விமானத்தில் இருந்த பயணிகள், விமானம் தரையிறங்கியதும் சட்டென்று திரும்பவும் பறக்க ஆரம்பித்ததால் குழப்பம் … Read more