வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ: பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டெல்லி பாஜக முக்கிய பிரமுகராக உள்ள பிரசாந்த் குமார் உமாராவ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 ஆம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்படுவது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபார்வேர்ட் செய்ததோடு, … Read more

சாலையில் சென்ற காரை தூக்கி வீசிய காட்டு யானை.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு

போச்சம்பள்ளி அருகே சப்பாணிப்பட்டி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை, காட்டு யானை தூக்கி வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை புகுந்த இரண்டு காட்டு யானைகள் அங்குள்ள பகுதிகளில் சுற்றித் திரிவதால் பதற்றமான சூழ்நிலை உள்ளது. இதனிடையே, போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாய்பாபா கோவில் பூசாரியான ராம்குமார் (27), யானையின் முன்பு செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது யானை தாக்கியதில் … Read more

அமைச்சர் உதயநிதியை வரவேற்க ப்ளக்ஸ், கொடிக்கம்பங்கள்… – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி விதிகளை மீறி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கொடி கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தஞ்சை மாவட்டத்திற்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிகிறார். இதன் காரணமாக தஞ்சை மாநகர மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்கு விரிவான ஏற்பாடுகள் … Read more

'எனது மகன், சகோதரன், குடும்பம் நீ!' – லோகேஷ் கனகராஜூக்கு வாழ்த்து சொன்ன சஞ்சய் தத்!

காஷ்மீரில் ‘லியோ’ படக்குழுவுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ‘விக்ரம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. விஜய்யுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டர்’ படத்தை போல் இல்லாமல், 100 சதவீதம் தனது பாணியில் இந்தப் படம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் … Read more

மதுரை: மதுபானக் கடையை அகற்றக் கோரி 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

மேலூர் அருகே மதுபானக் கடையை அகற்றக் கோரி இரண்டாவது நாளாக பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாணிபட்டி கிராமத்தில் நேற்று மதுபனக் கடையை அகற்றக் கோரி 3 மணி நேரமாக பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக இங்குள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் … Read more

வனத்திற்குள் நிலவும் வறட்சி… விலங்குகளின் தாகம் தீர்க்க நீர்த்தொட்டிகளை கட்டும் வனத்துறை

வனத்திற்குள் நிலவி வரும் வறட்சியால் காட்டு உயிர்களின் தாகம் தீர்க்க புதிய தண்ணீர் தொட்டிகளை வனத்துறை கட்டிவருகிறது. கட்டுமானம் நடைபெறும் வனப்பகுதியில் யானைகளின் தொடர் நடமாட்டத்தால் திட்டப்பணிகள் தாமதமாகிறதாக கூறுகின்றனர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருது, மான் என ஏராளமான வன உயிரினங்கள் உள்ள போதிலும், இதில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். இவ்வனப்பகுதி முக்கிய வழித்தடப்பாதை என்பதால் வலசை செல்லும் யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது வழக்கம். கடந்த பருவ … Read more

தேனி: இபிஎஸ்-க்கு எதிரான போஸ்டர் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்

தேனி அருகே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாசகங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நீக்கிவிட்டு பொய்வேஷம் போடும் பதவிவெறி பழனிசாமியே அ.தி.மு.கவை … Read more

திருவிழாவிற்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: காஞ்சிபுரத்தில் சோகம்

விச்சந்தாங்கலில் கிராம கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது 13 வயது சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கி படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காண்டீபன் – லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனாவை சென்னையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு லாவண்யா … Read more

நாமக்கல்: 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு பெண் எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் பெண்ணின் தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சிமோகனூர் போலீசார் விசாரணை. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி காக்கா தோப்பு, புது தெருவைச் சேர்ந்தவர்கள் கோபி – குணவதி தம்பதியர். இவர்களுக்கு சுஜித் பிரியன், பிரணவ் பிரியன் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், கோபி தனது மாமனார் கேசவனுடன் மோகனூர் உழவர் சந்தை அருகே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு … Read more

கன்னியாகுமரி: சுற்றி அடிக்கும் சுறைக்காற்று சீற்றமான கடல் – கரையில் காத்திருக்கும் படகுகள்

குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் காற்றுடன் கடல் சீற்றமாக இருப்பதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களைச் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் காணப்பட்டு வந்தது. தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா … Read more