உதயநிதியை அமைச்சராக்கியது மட்டுமே முதல்வர் ஸ்டாலினின் சாதனை – கே.டி.ராஜேந்திர பாலாஜி

எழுதாத பேனாவிற்கு சிலை வைப்பது, மகனை அமைச்சராக்கியது மட்டுமே முதல்வர் ஸ்டாலினின் சாதனை என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார் அப்போது…. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திய அரசு திமுக அரசு. திமுக ஆட்சியில் புதிதாக எந்த திட்டமும் கொண்டு … Read more

இரவானால் பனிப்பொழிவு.. பகலானால் கடும் வெயில்… – அவதிக்குள்ளாகும் சென்னைவாசிகள்!

சென்னையில் பகலில் கடும்வெயிலும், அதிகாலையில் பனிப்பொழிவும் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இன்று காலை பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். மார்ச் மாதம் வந்துவிட்ட போதிலும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் தொடர்ந்தே வருகிறது. கடந்த ஒருவாரம் பனிப்பொழிவு குறைந்து இருந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் இருந்து 7 மணி வரை பனிமூட்டம் அதிகமாகவே இருந்தது. பனிப்பொழிவு காரணமாக நடைப்பயிற்சி, சைக்கிளிங் மேற்கொள்பவர்கள் … Read more

ஆதார் மையத்தில் கட்டிய பணத்துக்கு ரசீது கேட்ட இளைஞர் – அடித்து உதைத்த ஊழியர்

ஆதார் மையத்தில் சான்றிதழுக்காக கட்டிய பணத்துக்கு ரசீது கேட்ட இளைஞரை, ஆதார் மைய ஊழியர்கள் அடித்து உதைத்த வீடியோ வைரலாகப் பரவிவருகிறது. அடி வாங்கிய இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஆதார் நிரந்தர பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தினமும் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் ஆதார் கார்டு பெயர், முகவரி மாற்றம் மற்றும் கைரேகை … Read more

"அவங்க உள்ளே வந்தால் தெய்வகுத்தமாகிடும்"- அமைச்சர் பி.மூர்த்தியின் சொந்த தொகுதியில் அவலம்!

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மந்திகுளம் என்ற கிராமத்தில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என அம்மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் பி.மூர்த்தியின் சொந்த தொகுதியான மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவனூர் ஊராட்சி மந்திகுளம் கிராமத்தில், ஊர் பொதுமக்களுக்கு சொந்தமான பழமையான மந்தையம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு சமூகத்தினர் வசித்துவரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினரும் வசித்துவருகின்றனர். ‘நிர்வாக குழுவில் இடம் … Read more

விஷப்பொடி தூவி காகங்கள் தொடர் கொலை… பிரியாணி கறிக்காக நடந்த கொடூரமா? கோவையில் பயங்கரம்!

பொள்ளாச்சி அருகே பெரிய கவுண்டனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக, விஷம் கலந்த பொடியை தூவி காகங்களை கொன்றுவந்துள்ளார் ஒருவர். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே பெரிய கவுண்டனூர் உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில், கடந்த சில தினங்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வந்துள்ளன. பின்னர் இறந்து விழுந்த காகங்கள் சிறிது நேரம் கழித்து தொடர்ச்சியாக காணாமலும் போயுள்ளன. காகங்கள் மாயமாகியதால், இறந்த காகங்களை மர்ம … Read more

இத்தாலி சொகுசு கார் நுழைவு வரி விவகாரம்: உயர்நீதிமன்றத்தை நாடிய ஹாரிஸ் ஜெயராஜ்!

இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மசராட்டி சொகுசு காரின் நுழைவு வரிக்கான அபராதத்தை செலுத்தும்படி, தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை விதிக்கக் கோரி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த 2010-ம் ஆண்டு மசராட்டி (Maserati Granturismo S Coupe) எனும் சொகுசு காரை இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் ஓட்டுவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட … Read more

பழனி: வெடிமருந்து வைத்து கிணறு தோண்ட முயன்ற தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்!

பழனி அருகே கிணறு தோண்டும் பணியின்போது வெடி வெடித்ததில் தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவ சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வடப்பருத்தியூர் கிராமத்தில் உடுமலைபேட்டையை சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்பவரின் சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்ததது. அப்போது ஆழமாக வெட்டும் போது பாறைகள் இருந்ததால் வெடி வைத்து தகர்க்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கிணறு வெட்டும் பணியிலிருந்த கள்ளிமந்தயத்தை சேர்ந்த சின்னராஜ் மகன் மணி (30) … Read more

"அதிகாரிகளுக்கு தெரிந்தேதான் கோவையில் கனிம வள கொள்ளை நடக்கிறது”- மக்கள் பரபரப்பு புகார்

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் அனுமதித்த அளவைவிட அதிக அளவில் கனிமவளங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகளும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. உலகின் பல்லுயிர் சூழல் நிறைந்த எட்டு பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை முக்கியமாக பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நிலையில் வனத்தை ஒட்டிய பகுதிகளிலும், வனத்தை ஒட்டி இருக்கக்கூடிய விவசாய நிலங்களிலும் செம்மண், பாறைகள் ஆகியவை அதிக அளவில் எடுக்கப்பட்டு … Read more

'அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?' – உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

புதுச்சேரியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.. சிறப்பம்சங்கள் என்ன?

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.300 சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும் எனவும், பெண்குழந்தைகள் பிறந்தவுடன் ரூ.50 ஆயிரம் 18 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்படும் எனவும், 6 ஆம் வகுப்பு முதல் அரசுப்பள்ளியில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என பேரவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9-ந் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. … Read more