டாஸ்மாக் வருமானம் தான்., திராவிட மாடல் வளர்ச்சியா? தமிழக முதல்வரை விமர்சித்த அண்ணமாலை.!

தமிழக அரசிடம் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமில்லாமல் தான், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி உள்ளதாக, பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்ததாவது, “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதுவரை மேகதாது அணை விவகாரம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக, கர்நாடக காங்கிரஸ் … Read more

பராமரிப்பு பணி! கும்மிடிப்பூண்டி பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம்.!

துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி துணை மின் நிலைய பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கும்மிடிப்பூண்டி பஜார், பைபாஸ் சாலை, பிரித்வி நகர், கோட்டக்கரை, முனுசாமி நகர், பூபாலன் நகர், மங்காபவரம், … Read more

திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று முதல் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து.!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிரமமின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்து அறநிலையத்துறை ஆணையர் சில நிபந்தனைகளுடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த வகையில் கோவிலில் ஏற்கனவே இருந்து வந்த ரூ. 250 சிறப்பு தரிசன கட்டணம் மற்றும் ரூ.20 கட்டணம் தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. ரூ.100 கட்டணமும் மற்றும் பொது தரிசனம் மட்டுமே … Read more

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு..!

கணவன் மீது பொய்வழக்கு போடப்படுகிறது என பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். மதுரை மேலபனங்காடியை சேர்ந்தவர் குமார் . இவரது மனைவி மகேஸ்வரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் என் கணவர் மீது திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தை போலீசார் அடிக்கடி பொய் வழக்கு போட்டு துன்புறுத்தி வருகின்றனர் தெரிவித்தார். பொய்வழக்கில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை … Read more

நீண்ட நேரம் செல்போனில் பேசிய கணவன்! மனைவி திட்டியதால் விபரீத முடிவு.!

செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான கிருஷ்ணா என்பவர், சுங்குவார்சத்திரத்தை அடுத்த, சோகண்டி கிராமத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். கிருஷ்ணாவிற்கு சொந்த மாநிலத்தைச் சேர்ந்த பூஜா என்பவருடன் ஓர் ஆண்டிற்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்பும் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்திலேயே இருந்த பூஜா, ஒரு வாரத்திற்கு முன், சுங்வார் … Read more

60 ரூபாய் – வசூலில் திமுக நிர்வாகிகள்.? ஆளுநரை சந்திக்கும் பாஜக.! 

பாஜகவின் விவசாய அணி மணிலா தலைவர் ஜி கே நாகராஜ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் தமிழக அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலும், நிர்வாக திறமையின்மையின் காரணத்தினாலும் விவசாயிகளின் இலட்சக்கணக்கான நெல்மூட்டைகள் கடந்த 15 நாட்களாக கேட்பாரின்றி கிடக்கின்றன. ஆங்காங்கே பெய்த மழையால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் வீணாகும் நிலையில் உள்ளன. மேலும் திமுகவின் நிர்வாகிகள் நெல்கொள்முதல் நிலையங்களை கைப்பற்றி, ஒரு மூட்டைக்கு ரூ.60 என … Read more

வளர்மதிக்கு கேக் ஊட்டிய எடப்பாடி.. மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ வைரல்.!

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மகளிர் தினத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருவரும் இணைந்து கேக் வெட்டி அதிமுக பெண் நிர்வாகிகளுக்கு கேக் ஊட்டி விட்டனர். தற்போது இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் … Read more

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் மருத்துவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார் மேயர்.!

மகளிர் தினத்தை முன்னிட்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் மருத்துவர்களின் சேவைகளை பாராட்டி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பரிசு மற்றும் கேடையங்களை வழங்கினார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கலையரங்கில் மகளிர் தின விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.  … Read more

#BREAKING : குடும்ப தலைவியின் பெயரில் வீடு – தமிழக முதல்வர் அறிவிப்பு.!

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வீடுகள் குடும்பத் தலைவிகளின் பெயரில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆண்களை விட பெண்களே அதிக அளவில் கல்வி பயின்று வருகின்றனர். அரசு … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுத் துறை.!

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி சமீபத்தில் வெளியான நிலையில், பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு தமிழக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 9ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 16 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18 முதல் மார்ச் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை … Read more