பணம் தர மறுத்த தந்தை… இருசக்கர உதிரிபக விற்பனை கடைக்கு தீ வைத்த மகன்..!

குடும்ப பிரச்சினை காரணமாக தந்தையின் இருசக்கர உதிரிபாக விற்பனை கடைக்கு தீ வைத்து எரித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அந்த பகுதியில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்திவருகிறார். மாரியப்பனுக்கு அவரது மகன் லட்சுமணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தந்தையிடம் லட்சுமணன் பணம் கேட்டுள்ளார் அதற்கு மாரியப்பன் தரமுடியாது என மறுத்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. … Read more

பேரறிவாளனுக்கு ஜாமின்! கால் நூற்றாண்டு கால சட்டப் போராட்டத்தின் இன்னொரு மைல்கல் என சீமான் கருத்து.!

பேரறிவாளனுக்கு பிணை கிடைத்திருப்பது கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தின் முக்கிய மைல் கல் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். நீதியரசர் நாகேஷ்வர்ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள முதன்மைத்துவம் வாய்ந்த இம்முடிவை வரவேற்கிறேன்!  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கினை முன்னின்று நடத்திய மூத்த வழக்கறிஞர் … Read more

மதிமுக பொதுக்குழு! 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தலமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி கால 10 மணிக்கு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம், கட்சியில் காலியாக உள்ள தலைமை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 … Read more

கன்னியாகுமரி மீனவர்கள் கைது! ஜி.கே.வாசன் கண்டனம்.!

இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற பொழுது, இந்தோனேசிய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் … Read more

ஜாலியாக இருக்க.. தாலியை கட்டி.. அனுபவித்துவிட்டு மாயமான நாடக காதலன்.! பொடிவைத்து பிடித்த போலிசார்.!

கோவை மாவட்டத்தில் பிரபாகரன் என்ற நபர் சில மாதங்களுக்கு முன் ஆந்திராவிற்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கு தங்கி வேலை பார்த்த பொழுது அவருக்கு ஒரு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது அவரிடம் காதலிப்பதாக தெரிவித்து நான்கு மாதங்கள் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். திடீரென்று அங்கு இருந்து பிரபாகரன் மாயமாகியுள்ளார். தனது கணவரை காணாமல் பெண் தேடி அலைந்து பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகாரின் பேரில் … Read more

மதுரை சித்திரைத் திருவிழா.. பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை விதித்திருந்தது. அதன்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பக்தர்களின்றி நடைபெற்று. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. Source … Read more

உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவு || மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மிக நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பேரறிவாளன் பிணையில் விடுதலையாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பேரறிவாளனின் சட்டப்பூர்வ விடுதலை சுமார் பத்தாண்டுகளுக்கு முன் 2014-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் … Read more

மயிரிழையில் உயிர் தப்பி வந்த மாணவர்கள்…, உக்ரைன் விவகாரத்தில்., சீமான் பரபரப்பு அறிக்கை.!

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்விக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர்ச்சூழலில் சிக்கி உயிர்பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அவரவர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பினைத் தொடர இந்திய மருத்துவக் கழகம் உரிய … Read more

நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு.!

நாட்டு இன மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வெளிநாட்டு கலப்பின மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்றும், நாட்டு மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சான்று அளித்த பிறகே அவற்றை ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும் … Read more

ஆடுதுறை பேரூராட்சி தேர்தல் – சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தஞ்சாவூர் : ஆடுதுறை பேரூராட்சியில் மொத்தம் 15 இடங்களில் பாமக 4 இடங்களிளும், திமுக 4 இடங்களிளும், அதிமுக 2 இடங்களிளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, மதிமுக 1,  சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பேரூராட்சி தலைவராக வேண்டுமெனில் 8 பேரின் ஆதரவு தேவை. பாமக சார்பில் வெற்றி பெற்றுள்ள வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினும், மதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும் களமிறங்கினர். இதற்கிடையே ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் மறைமுக … Read more