அடுத்தவாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு பேரதிஷ்டம்! ஆனால் மகர ராசிக்காரர்களுக்கு – வாரத்திற்கான ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதித்தாலும், மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனையே கொடுக்கும். எனவே 2023 மார்ச் மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்த நிலையில் துலா ராசி முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்குமான இந்த வார பலன்கள் எப்படி அமையப்போகிறது … Read more

பேராதனை பல்கலை வளாகத்தில் காதல் செய்வதற்கு தடையில்லை! துணைவேந்தர்

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் காதல் செய்வது தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அளவுக்கு மீறிய செயற்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். டி.எம். லமாவன்ச தெரிவித்துள்ளார்.  அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் செனட் கட்டடத்துக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டித்தழுவியபடி நின்றிருந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதை தொடர்ந்தும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தப் போவதில்லை  பல்கலைக்கழக வளாகத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் 13,000க்கும் … Read more

விமான டிக்கெட்டுக்களின் விலை குறைகிறது!

டொலரின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு ஏற்ப விமான டிக்கெட்டுக்களின் விலையும் 20 வீதத்தால் குறைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விமான டிக்கெட்டுகளின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை டொலர் விலை குறைவினால் விமான டிக்கெட்டுகளின் விலையை குறைக்குமாறு இலங்கையில் உள்ள விமான நிறுவன பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், … Read more

வெளிநாட்டில் பூபதி அம்மாவிற்கு பூ வைக்கிறார்கள்! தாயகத்தில் ஏன் இப்படி செய்கிறீர்கள் கண்ணீருடன் மகள் (Video)

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் மாதத்தின் முதலாம் நாள் இன்றைய தினம் மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அவரது கல்லறையில் அனுஷ்டிக்கப்பட்டது. 1988.03.19ஆம் திகதி சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் (19.03.2023) அனுஷ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு – நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவுத் தூபியில் அவரின் பிள்ளைகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இவர் மட்டக்களப்பில், அகிம்சை … Read more

தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கையின் பொருளாதாரம்! வெளியான தகவல்

நடப்பு ஆண்டிலும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியே ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் அட்வகோட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ இது தொடர்பான எதிர்வுகூறல் ஒன்றை முன்வைத்துள்ளார். கடந்த வருடத்தில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் 7 வீதம் மற்றும் 8 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதைக் காணமுடிகிறது. வறுமையில் தள்ளப்பட்டுள்ள பொதுமக்கள்  அந்தவகையில், இந்த வருடமும் பொருளாதார வளர்ச்சி மேலும் 3 எதிர்மறை புள்ளிகளால் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது … Read more

பிறப்பிக்கப்பட்டுள்ள கடும் உத்தரவு – தயார் நிலையில் பொலிஸார்

நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டங்களை நடத்தினால், தேர்தல் சட்டத்தின் கீழ் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் கலைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடுமையான உத்தரவுகள்  அண்மையில் நாட்டில் பொலிஸ் பிரிவுகளுக்கு தேவையான கலகத் தடுப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொலிஸாரின் அனுமதியின்றி நடத்தப்படும் அனைத்து ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களை கலைக்கும் போது இடையூறு விளைவிப்பவர்களை கைது … Read more

கொழும்பில் துப்பாக்கிச் சூடு! பொலிஸார் தீவிர விசாரணை (Video)

கொழும்பு- கொட்டாஞ்சேனை பரமாநந்த விகாரமாவத்த பகுதியில்  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.  இதில் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 40வயது மதிக்கதக்க ஒருவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். இன்று (18.3.2023) இரவு இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  முகமூடி அணிந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  Source link

சர்வதேச விமான நிலையமொன்றில் தவறுதலாக இறக்கிவிடப்பட்ட இலங்கை பயணிகள்!

பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த விமானப் பயணிகள் பெரும் இடைஞ்சலை எதிர்கொண்டுள்ளனர். நேற்றையதினம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கொழும்பில் இருந்து வந்த 30 விமானப் பயணிகள், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) கவனக் குறைவால், உள்நாட்டு வருகை வாயிலில் தவறுதலாக இறக்கிவிடப்பட்டதாக NDTV தெரிவித்துள்ளது. தவறான வாயிலில் இறக்கப்பட்ட பயணிகள் பெங்களூர் விமான நிலையத்தில் சர்வதேச வருகை வாயிலுக்குப் பதிலாக அவர்கள் உள்நாட்டு வருகைப் வாயிலில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். “மார்ச் … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள உத்தரவு

கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையை இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஆசிரியர் இடமாறுதல் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட இருந்த சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படவுள்ளன. பல்வேறு காரணங்களால் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் மற்றும் ஒட்டுமொத்த பாடசாலைக் கல்விச் செயன்முறைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பரீட்சை கற்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் முடிவு எனவே, ஆசிரியர் … Read more