திருவலஞ்சுழியில் சோழர்களின் போர் தெய்வம் `ஏகவீரி' சோழமாதேவி எழுப்பிய குலதெய்வ கோயில்! சோழர் உலாவில்!

‘பொன்னி சூழ்ந்த வலஞ்சுழி’ என்று அப்பரும் ‘பொன்னி வலஞ்சுழி’ என்று சம்பந்தரும் போற்றிய காவிரியின் தென்கரைத் தலம் திருவலஞ்சுழி. சுந்தரரும் பாடிப்பரவியுள்ளார். திருவலஞ்சுழி கருங்கல் பலகணி செய்ய முடியாத அதிசயங்களில் ஒன்று! வெண்மை நிறம் கொண்ட சுவேத விநாயகரும் இங்கு விசேஷம் என்று அறிந்திருக்கலாம். இது மட்டும் திருவலஞ்சுழி இல்லை. வரலாற்றிலும் பல அதிசயச் சுவடுகளைக் கொண்ட தலமிது. திருவலஞ்சுழி கோயில் திருவலஞ்சுழி என்னும் கபர்தீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் க்ஷேத்திர பாலர்தான் ராஜராஜ சோழனின் குலதெய்வம் என்கிறது … Read more

`Prank' என்ற பெயரில் சாலையில் அபத்த நாடகம்; தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் மீது வழக்கு!

HIT First Case, Pagal உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தவர் விஷ்வக் சென். அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் `அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்’. இந்தப் படத்திற்கு ப்ரோமோஷன் என்கிற பெயரில் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்ததாக அவர் மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஷ்வக் சென்னும் அவரது நண்பர்களும் காரில் வந்து கொண்டிருந்த போது யாரென தெரியாத ஒரு நபர் அவர்களின் வாகனத்துக்கு முன்பு பாய்ந்து `அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்’ … Read more

`ஏதோ எங்களால் முடிந்தது’ -சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போலீஸார்

மத்தியப்பிரதேசத்தில், தினமும் சைக்கிளில் சென்று உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவருக்கு பைக் வாங்கிக்கொடுத்து உதவிய போலீஸ் அதிகாரிகளின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 22 வயதாகும் ஜெய் ஹால்டே எனும் அந்த இளைஞன் மத்தியப்பிரதேசத்தில், ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு டெலிவரி செய்யும் ஓர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். குடும்பச்சூழ்நிலை காரணமாகத் தினமும் சைக்கிளில் சென்று உணவு டெலிவரி செய்து வருகிறார். ஜெய் ஹால்டேவின் இந்த நிலையைக் கண்ட இந்தூர் போலீஸ் அதிகாரிகள், அவருக்கு … Read more

“எங்க உயிருக்கே ஆபத்தாக இருக்கு"- மருத்துவ கழிவுகளால் துயரத்தில் திருவாரூர் கிராம மக்கள்

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் அமைந்துள்ளது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையை 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். ஏறக்குறைய 500 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 1,500 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டலை என்னும் கிராமத்தில் … Read more

கடன் பிரச்னையில் காவிரியில் குதித்த பெண்; பரிசலில் வந்து காப்பாற்றிய மீனவர்! – திக் திக் காட்சிகள்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதா. இவர், விசைத்தறி கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரின் கணவரும் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, ராதா நேற்று (2 -ம் தேதி) ஈரோடு செல்லும் சாலையில் உள்ள காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவர், … Read more

KKR v RR: ரிங்கு சிங்கின் அதிரடி, ராணாவின் முதிர்ச்சி; ஐந்து தோல்விகளிலிருந்து மீண்டுவந்த கொல்கத்தா!

தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வந்து ஒரு வெற்றியைப் பெறுவது, அந்த அணியின் ஆட்டக்காரர்களுக்கு உற்சாகம் அளிக்கிறதோ இல்லையோ, அந்தந்த அணியின் ரசிகர்களை நிச்சயம் குதூகலப்படுத்தும். அதுவும் தொடரிலிருந்தே வெளியேறும் நிலைக்கு எல்லாம் சென்றுவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஒரு வெற்றி, அவர்களின் இருப்பை உறுதி செய்யும்போது அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சென்னையின் ரசிகர்களுக்கு நேற்றைய போட்டி அப்படியானது என்றால், ‘எனி பிளாஸ்திரீஸ் டுடே?’ எனக் கேட்டால் கொல்கத்தா ரசிகர்கள் ஹவுரா பிரிட்ஜிலிருந்து கத்துவது கேட்கும். … Read more

03.05.22 செவ்வாய்க்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

“பாஜக, ஆர்.எஸ்.எஸ் நாட்டை சாதி, மத அடிப்படையில் பிரிக்க முடிவுசெய்துவிட்டன!" – அசோக் கெலாட்

இந்து நாட்காட்டியின்படி புத்தாண்டின் முதல் நாளான ஏப்ரல் 2 மற்றும் ராம நவமி தினத்தன்று, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. அதிலும், கடந்த ஏப்ரல் 2-ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம், கரோலி நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்து அமைப்பினருக்கும், முஸ்லிம்களுக்குமிடையே வெடித்த கலவரத்தில் அங்கிருந்த பல்வேறு வாகனங்கள் மற்றும் கடைகள் தீக்கிரையாகின. மேலும், தொடர்ச்சியாக நடைபெற்ற இது போன்ற இந்து-முஸ்லிம் கலவரங்களில், பாதிக்கப்பட்ட மாநிலங்களின் … Read more