`தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட விவகாரம்: டெல்லி முதல்வர் வீட்டின் முன் பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்!

டெல்லி சட்டமன்ற கூட்டத்தின் போது `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பா.ஜ.க-வினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ” தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு செய்யுங்கள் என்று பா.ஜ.க-வினர் சொல்கிறார்கள். இந்த திரைப்படம் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என விரும்பினால் யூடியூபில் போடுங்கள். அனைவரும் இலவசமாகப் பார்ப்பார்கள். காஷ்மீர் பண்டிட்கள் பெயரில் சிலர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். நீங்கள் போஸ்டர் ஒட்டவேண்டும் … Read more

`விரைவில் சென்னைக்கு 2-வது விமான நிலையம்!' – மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தகவல்

இந்தியா முழுவதும் பெரு நகரங்களுக்கு விமானச் சேவையை விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இந்தியா முழுவதும் பெரு நகரங்களுக்கு 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்காக ரூ.38,000 கோடி செலவில் டெல்லி ஜிவாரியிலும், அதே போல ரூ.17,000 கோடியில் மும்பையில் உள்ள நவி மும்பையிலும் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டுவருகிறது. விமான நிலையம் … Read more

தூத்துக்குடி: மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் தேர்வு; அமைச்சர்கள் அணிப் போட்டியால் சலசலப்பு!

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில், 44 தி.மு.க வேட்பாளர்களும், 6 அ.தி.மு.க வேட்பாளர்களும், 3 காங்கிரஸ் வேட்பாளர்களும், சி.பி.எம், சி.பி.ஐ, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு வார்டிலும், 4 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். மறைமுகத் தேர்தலில், 20-வது வார்டு கவுன்சிலரான ஜெகன் மேயராகவும், 46-வது வார்டு கவுன்சிலரான ஜெனிட்டா துணை மேயராகவும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மறைந்த முன்னாள் தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான … Read more

மயிலாடுதுறை: ஸ்ரீ பரிமளரங்கநாதர் ஆலயத் தெப்போற்சவம் – திரளான பக்தர்கள் வழிபாடு!

மயிலாடுதுறை அருகே திருஇந்தளூரில் அமைந்துள்ள  பரிமளரங்கநாதர் ஆலயப் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, பெருமாள், தாயாருடன் சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தருளும் தெப்போற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஸ்ரீ பரிமளரங்கநாதர் தெப்போற்சவம் சுமார் 1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பரிமளரெங்கநாதர் ஆலயம் ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், சாரங்கம், கோவிலடி, பரிமளரங்கம் என்று பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்பாலிக்கும் பஞ்ச அரங்க ஆலயங்களுள் ஒன்றாகும். இந்த ஆலயம் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 -வது திவ்ய தேசமாகும் இந்த ஆலயம் 108 … Read more

வெம்பக்கோட்டை: தோண்டத் தோண்ட கிடைத்த பழங்காலப் பொருள்கள்… ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உட்பட தமிழகத்தின் ஏழு இடங்களில் புதிதாகத் தொல்லியல் அகழாய்வுப் பணியை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரத்தில் வெம்பக்கோட்டையில் முதலாம் கட்டக் கள ஆய்வுக்கான தொல்லியல் அகழாய்வுப் பணியினை தமிழகத் தொல்லியல் மற்றும் தொழில் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார். அதனடிப்படையில் வெம்பக்கோட்டை தொல்லியல் மேட்டில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவந்தன. தொல்லியல்மேட்டில் இரண்டு குழிகளுக்கு அளவீடு செய்யப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் 30 மீட்டர் ஆழத்தில் … Read more

"பன்மொழி அறிவு பல விதங்களில் பலன் தரும்"- ஆனந்த ரங்கம் பிள்ளை வாழ்க்கை தரும் பாடங்கள்!

பாலமாய்த் திகழ்ந்தால் பல விதங்களில் பயன் உண்டு இந்திய மன்னர்கள் மற்றும் பிரெஞ்சு மேலதிகாரிகள் ஆகியோருக்கிடையே தனது மொழிப் புலமையால் ஒரு பாலமாக விளங்கினார். இதன் காரணமாக செங்கல்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். முசாபர்சங் என்ற மன்னர் இவருக்கு ஆயிரக்கணக்கில் குதிரைகளை வழங்கினாராம். சிறப்பான குறிப்பேடுகள் வரலாறுப் பக்கங்களில் மதிப்பை கூட்டும் தினசரி நாட்டு நடப்புகளை எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர் ஆனந்தரங்கம் பிள்ளை. ஒன்றிரண்டல்ல, சுமார் 25 ஆண்டுகளுக்கு இப்படி எழுதி இருக்கிறார். இதன் காரணமாக … Read more

King Richard: வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் உருவான கதை; ஆஸ்கர் நாயகன் வில் ஸ்மித் சாதித்த கதை!

ஸ்போர்ட்ஸ் பயோபிக் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் அந்தந்த நாயகர்களின் வெற்றி பெற்ற சம்பவங்களின் தொகுப்புகள் தான் திரைப்படங்களாக விரியும். அப்படி இல்லையெனில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நாயகர்களின் பயிற்சியாளர் குறித்த பயோபிக்காக விரியும். ஆனால், இரண்டு ஜாம்பவான்களின் தந்தை ஒருவர் அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வர என்னென்ன செய்தார் என்கிற பயோபிக் என்பதுதான் ‘கிங் ரிச்சர்ட்’ மீதான ஆர்வம் பலருக்கும் ஏற்பட முக்கியக் காரணம். இன்னொன்று இதன் நாயகன் வில் ஸ்மித்! Will Smith “டென்னிஸ் நீங்க … Read more

“சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா திமுக அரசு?” – எடப்பாடி பழனிசாமி

சென்னை, பல்லாவரம் பகுதியில் கவுன்சிலராக இருப்பவர் சித்ரா தேவி. இவர் கணவர் முரளியின் தம்பி தினேஷ் என்பவர் சங்கர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியிருக்கிறார். அவருக்குப் பணம் கொடுக்க மறுத்த கடைகளை அடித்துச் சேதப்படுத்தியிருக்கிறார். மேலும் திமுக கவுன்சிலரின் கணவர், வீடு கட்டும் உரிமையாளரை கூப்பிட்டு மிரட்டும் வீடியோவையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது ட்விட்டரில், … Read more

“ரஷ்யாவுடன் ராணுவ உறவு; மேற்குலக நாடுகளுடனும் நட்புறவு” – இந்தியாவின் நிலை குறித்து சசி தரூர்

காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ‘உக்ரைன் அன்டோல்ட்’ எனப்படும் மூன்று நாள் புகைப்பட கண்காட்சியை டெல்லியில் நேற்று(செவ்வாய்) தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியானது, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கு இடையே போர் தொடக்குவதற்கு முன்பு உக்ரைன் எப்படி இருந்தது என்பதன் பிரதிபலிப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உரையாடலின் போது உக்ரைன் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சசி தரூர் பதிலளித்தார். அப்போது பேசிய சசி தரூர், “ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தனது சொந்த நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்ததால், … Read more

`மூப்பிலா தமிழே' பாடலில் ஜாவா பைக்; ஆனந்த் மஹிந்திரா தமிழில் ட்வீட்; மகிழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் தாமரை வரிகளில் கடந்த 25-ம் தேதி வெளியானது ‘மூப்பில்லா தமிழே தாயே’ மியூசிக் சிங்கிள் ஆல்பம். தமிழின் பெருமைகளையும் தொன்மையையும் பேசும் இந்தப் பாடல் காணொலியாகவும் வெளியாகியுள்ளது. இதன் இசை மற்றும் வரிகளுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. மஹிந்திரா குழுமங்களின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுவும் தமிழில். ஆனந்த மஹிந்திராவின் ட்வீட்டில், “இதில் இடம்பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க … Read more