தளபதி 67-ல் சிம்பு பட இயக்குநர்: விக்ரம் இயக்குநரின் பலே பிளான்

நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுவிட்டதால், அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இசையமைப்பாளர் தமன், வாரிசு படத்திற்கான இசை சூப்பராக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்திருக்கும் சரத்குமார் பேசும்போது, படம் பக்கா என்டர்டெயினராக இருக்கும் என கூறியிருக்கிறார். அவரைப் … Read more

திமுக அரசுக்கு இன்னும் 44 அமாவாசைகளே உள்ளது: எடப்பாடி பழனிச்சாமி கணிப்பு

அண்ணாவின் பிறந்தநாள் விழாவை ஒட்டி பொதுக்கூட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் புற நகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்று முதல் பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு க்ரைன் மூலம் ராட்ஷச மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகப்படுத்தினர். நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார் அவர் பேசும்போது. பேரறிஞர் … Read more

நடிகர் போண்டாமணிக்கு வடிவேலு கொடுத்த வாக்குறுதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு சுவாமி  தரிசனம் மேற்கொண்டார்.  நான் தற்போது  நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் விரும்பும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என பேட்டி அளித்துள்ளார்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு சுவாமி  தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது, தொடர்ந்து கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டார். அதனை தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் … Read more

கருணாஸ் நடித்துள்ள ஆதார் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் போன்ற படங்களை இயக்கிய ராம்நாத் தற்போது ஆதார் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் கருணாஸ் கதையின் நாயகனாகவும், அருண்பாண்டியன், ரித்திகா, திலீப், பாகுபலி பிரபாகர் மற்றும் உமா ரியாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆதார் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  மிகப்பெரிய கட்டிடத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் கருணாஸ், அவருக்கும் ரித்திகாவிற்கு திருமணமாகி குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த அடுத்த நாளே ரித்திகா காணாமல் போய் … Read more

கள்ளக்குறிச்சி சம்பவம்: மகளின் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தை சுப்பிரமணியன் இவரது மனைவி பரமேஸ்வரி இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தை உள்ளனர். இந்நிலையில் பரமேஸ்வரி கடந்த 2020 ஆண்டு தனது கணவருக்கு கடன் வாங்கி கொடுத்து அதை திரும்ப கொடுக்காததால் வாங்கிய இடத்தில் பணம் கொடுக்க முடியாமல் மன உளைச்சல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரி தனது 9 வயது மகள் கரிஷ்மாவிற்கு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். இதில் மகள் கரிஷ்மா இறந்த நிலையில் தாய் பரமேஸ்வரி  … Read more

கள்ளக்குறிச்சி விவகாரம்: விசாரணைக்கு ஆஜரான யூடியூபர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், இந்த சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு மாறான தகவல்கள் பகிரப்பட்டு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி வாகனங்களுக்கு … Read more

கோவை: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; பதற்றமான சூழல்: காவல்துறை தீவிர விசாரணை

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா குறித்தும் இழிவாகப் பேசியதாக கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று முன்தினம் 3 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் பீளமேடு பகுதியில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு உருவபொம்மை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.  இதில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் 11 … Read more

அதிமுக போஸ்டர்களை நள்ளிரவில் கிழிக்கும் மர்ம நபர்கள்!

கோவை விளாங்குறிச்சி ரோடு 24 ஆவது வட்டக் கழகச் செயலாளர் லட்சுமணன் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் உட்பட அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை அச்சிட்டு ஒட்டியிருந்தார். கோவை அவினாசி சாலையில் மேம்பலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்ட்டர்களை மர்ம நபர் ஒருவர் போஸ்டர்களை கிழிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் அதே இடத்தில் மீண்டும் அப்பொழுது அதிமுக அரசின் திட்டங்களை விளக்கும் போஸ்ட்டர்களை ஒட்டியுள்ளனர். கோவை அவினாசி … Read more

உறவால் இரவில் அலறல் – பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம்

இங்கிலாந்தின் ரெக்ஸ்ஹாம் என்ற பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டின் மோர்கன் என்ற பெண். 41 வயதான மோர்கன் கணவரை பிரிந்து, தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டிலிருந்து இரவு நேரங்களில் அதிகமாக சத்தம் வருகிறது என்றும், அதை காதுக்கொடுத்தக் கூட கேட்க முடியவில்லை என அக்கம்பக்கத்தினர் தொடர்ந்து புகார் கூறி வந்துள்ளனர்.  இதுதொடர்பாக, மோர்கனை 2020ஆம் ஆண்டில் அக்கம் பக்கத்தினர் எச்சரித்துள்ளனர். சத்தமாகப் பாட்டுக் கேட்டதாக முதலில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சத்தத்தைக் குறைத்துக் கொள்ளும்படி … Read more

தமிழ்நாடு அரசின் கடன் சுமை குறைந்துள்ளது – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி பண வீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. கரோனா காலத்தில் மக்களிடையே பணப்பழக்கம் குறையாத வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் சாமானிய மக்களுக்கு அவர்களின் வருவாய் தடைபெறாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 6 … Read more