பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் பாடசாலைகளில் பௌதீக வளங்களை திறம்பட பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் பாடசாலைகளில் பௌதீக வளங்களை திறம்பட பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தேசிய பேரவை உபகுழுவின் தலைவர் திரு பாட்டலி சம்பிக்க ரணவக்க…   உணவு உற்பத்தி, மின்சார உற்பததி போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் … Read more

63 நாட்களாக கடலில் மாயமான இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடலோர காவல்படையினரால் மீட்பு

கடந்த 2022 செப்டம்பர் 25 ஆம் திகதி, தொழிலுக்கு சென்ற நான்கு இலங்கை கடற்றொழிலாளர்கள், தங்களது தொடர்பை இழந்த நிலையில், இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் மீன் பிடிப்பதற்காக எஃப்.வி. நீல் மேரி என்ற படகில் கிழக்கு திசை நோக்கிப் பயணித்தபோதே தொடர்பை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு இந்தநிலையில் இறுதியில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அடைந்துள்ளனர். அங்கு இந்திய கடலோர காவல்படை அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் … Read more

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குக் கிடைக்க வேண்டிய நிலுவை வரி, தண்டப்பணம் , வட்டித் தொகை 773 பில்லியன் ரூபா

2022 யூன் 30ஆம் திகதி வரையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குக் கிடைக்க வேண்டிய நிலுவை வரி, தண்டப்பணம் மற்றும் வட்டித் தொகை 773 பில்லியன் ரூபாய்கள் – கோப குழுவில் புலப்பட்டது 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலவுசெய்து உருவாக்கப்பட்ட RAMIS கட்டமைப்பு இன்னமும் முறையாக செயற்படுத்தும் நிலைமையில் இல்லை… 2022 யூன் 30ஆம் திகதிவரை 2.4 பில்லியன் ரூபா பெறுமதியான 4831 காசோலைகள் நிராகரிப்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு 2022 யூன் 30ஆம் திகதி … Read more

குறைந்த உற்பத்தி செலவினைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை பிடித்துள்ள இடம்

உலகின் மிகக் குறைந்த உற்பத்தி செலவினைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை 10ம் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க ஆய்வு நிறுவனமொன்றினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. முதல் இடத்தை பிடித்த இந்தியா மிகவும் குறைந்த உற்பத்தி செலவுகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதனிலை வகிக்கின்றது. இந்தியா, சீனா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன. பல்வேறு அடிப்படை காரணிகளின் அடிப்படையில் இந்த … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரைப் பார்க்கச் செல்வது போன்றதாகும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அங்கு தரும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நிதி தீர்வுகள் வலியை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது. அதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி … Read more

வவுனியா,பொலநறுவை பிரதேச நெல் களஞ்சியசாலைகளை நவீனமயப்படுத்த நிதி

2023 ஆம் ஆண்டில் 8000 மெற்றிக் தொன் அரிசியை கையிருப்பில் பேணுவதற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக அரிசி கையிருப்பைப் பாதுகாக்கத் தேவையான வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாக அவர் கூறினார். வெகுஜன ஊடக அமைச்சுஇ வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் இணைந்து நேற்று (29) நடத்திய ஜூம் zoom செய்தியாளர் … Read more

கொழும்பில் 'மெயின் ஷிஃப் 5' 5 (Mein Schiff-5) சொகுசு பயணிகள் கப்பல்

2000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் ‘மெயின் ஷிஃப் 5’ (Mein Schiff-5)  என்ற சொகுசு பயணிகள் கப்பல் நேற்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.   இவர்களை வரவேற்கும் நிகழ்வில், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

அடுத்த வருடம் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி – நாடு முழுவதும் மின்தடை

எதிர்வரும் வருடத்தில் மின்சார உற்பத்தி மிகவும் நிச்சயமற்ற நிலைமையை எதிர்நோக்குவதாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முகாமையாளர் நாலக விஜேகோன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேவைக்கு ஏற்ப நிலக்கரி விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுமாயின் இந்த நெருக்கடி நிலவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கான பிரதான மின்சாரத் திறனைக் கொண்டு செல்லும் பிரதான மின் உற்பத்தி நிலையம் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையமாகும். அனல்மின் நிலையம் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையமாகும். இலங்கையின் … Read more

இலங்கைக்கான புதிய பிரான்ஸ் தூதுவர், சபாநாயகருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான புதிய பிரான்ஸ் தூதுவர் ஜோ பஸ்வா நேற்று (நவ. 28) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். இதன்போது வரவுசெலவுத்திட்டக் காலம் மற்றும் பாராளுமன்றப் பணிகள் போன்று இரு நாடுகளிலும் காணப்படும் பாராளுமன்ற முறைமை மற்றும் அரசியல் கட்டமைப்பு என்பன தொடர்பில் இரு தரப்பினரும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 2023 இல் பிரான்ஸ் – இலங்கை இராஜதந்திர உறவுகளுக்கு 75 வருடங்கள் பூர்த்தியடைவது … Read more