இன்றைய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து … Read more

இந்த வருடத்தில் 19 புதிய முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 19 புதிய முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த எட்டு மாத காலப்பகுதியில் ஏனைய வகை வாகனங்கள் சுமார் 15 ஆயிரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 93 முச்சக்கர வண்டிகளும், 2020 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 150 முச்சக்கர வண்டிகளும், 2019 ஆம் ஆண்டில் 15 … Read more

அந்தோனிபுரம் கிராமத்திற்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் – கருவாடு பதனிடும் இயந்திரத்திரம் கையளிப்பு

அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கிராமத்தை சேர்ந்த மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்தினை வழங்கியதுடன் கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பு தொடர்பாகவும் கலந்துரையாடினார். இதன்போது கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு பண்ணைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது உட்பட பல்வேறு தொழில் சார் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். இலுப்பைக்கடவை கடற்றொழிலாளர் கிராமத்தில் கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கலந்துரையாடல் மூலம் முரண்பாடுகளை … Read more

இந்தியாவில் புதிதாக 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 43 ஆக குறைவடைந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 4 ஆயிரத்து 43 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 45 இலட்சத்து 43 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 676 பேர் … Read more

  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.72 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.72 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 கோடியே 74 இலட்சத்து … Read more

சற்றுமுன் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு! இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை (Live)

நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 வரை “தேசியப் பேரவையை” ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது. பார்வையாளர் கூடம் திறப்பு இதேவேளை நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோவிட் தொற்று நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் … Read more

கடும் நிதி நெருக்கடி – முடங்கும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள்

நிதி நெருக்கடி காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதிலும் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான எழுதுபொருட்களை பெற்றுக்கொள்வது, அத்தியாவசிய ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக நிறுவனங்களின் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். இருபதாயிரம் கோடிக்கு மேல்  நிலுவைத் தொகை அமைச்சுக்களில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது மட்டுமன்றி ஆரம்பிக்கப்பட்ட … Read more

ஜப்பானில் “நன்மடோல்” சூறாவளி

ஜப்பானில் கடந்த 18 ஆம்திகதி ஏற்பட்ட  “நன்மடோல்” சூறாவளி தெற்கு பகுதியில் உள்ள கியூஷு தீவினை தாக்கியுள்ளது. தீவின் தெற்கு முனையில் உள்ள ககோஷிமா நகருக்கு அருகே புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்று வீசியதால் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. தெற்கு பகுதியில் உள்ள தீவுகள் முழுவதும் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் 500மி மீ மழை … Read more

ரஷ்யாவிடமிருந்து அதிக உதவிகள் கிடைக்கும் – அமைச்சர் பந்துல குணவர்தன

தற்போதைய நெருக்கடியில் ரஷ்யாவிடமிருந்து அதிக உதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பான கலந்துரையாடல்கள் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாகவும், தற்போதைய நெருக்கடியில் ரஷ்யாவிடமிருந்து அதிக உதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெறுவதற்கு கடன் வசதியை பெற்றுத் … Read more