முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே இன்று சேவைகள்

அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இன்றைய தினம் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமையன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்கூட்டியே திகதிகள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தமது சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் … Read more

ஆசியாவின் இரண்டாவது வேகமான வீரர்

தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், உலகின் 20வது அதிவேக ஓட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். யுபுன் அபேகோன் தெற்காசியாவின் வேகமான மனிதன் என்பதுடன், ஆசியாவின் இரண்டாவது வேகமான மனிதன் என்ற புகழையும் பெற்றுள்ளார். கடந்த பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியிலும் யுபுன் அபேகோன் வெண்கலப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்படத்தக்கது.

ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்

உக்ரேனின் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட 7 இலங்கை மாணவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த குறித்த மாணவர்கள், கடந்த ஜனவரி மாதம் உக்ரைனுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ரஷ்யாவிடம் சிக்கிய இலங்கையர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்யப் படைகளின் பிடியில் சிக்கியுள்ள இந்த மாணவர்கள் தொடர்பில் இதுவரை எவரும் முறைப்பாடு செய்யவில்லை என ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய படைகளால் … Read more

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. சபைக்கான இலங்கைத் தூதுக் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தலைமை

2022 செப்டெம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் அறிக்கையை வழங்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு, குழு 77 மற்றும் சீன உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம், உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவின் அமைச்சர் கூட்டம் மற்றும் அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் … Read more

குறைந்த வருமானம் பெறும் கிராமிய  இளம் சமுகத்திருக்கு ஜப்பான் தொழில்நுட்ப பயிற்சி

குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளம் சமுகத்திருக்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பான் தூதுவர் மிசு கொஸியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக ஜப்பான் தூதுவர் மிசு கொஸி, இதனை தெரிவித்தார். அதற்கிணங்க தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சருக்கும் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பொழுது இதன்அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார். ஜப்பான் தூதுவர் அதற்கு மிக சாதகமான … Read more

ஆசிய நாடுகளில் நாளை துக்க தினம்

  மறைந்த இரண்டாவது எலிசபெத் மகராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் வெஸ்ற்மினிஸ்ரர் மண்டபத்திற்கு அருகில் காத்திருக்கின்றனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை உலக நாடுகளின் தலைவர்களும் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 500 ராஜதந்திரிகள் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இளவரசர் அன்ரூவும் தனது தாயாராக்கு அஞ்சலி செலுத்தினார். நாளையதினம் எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து இறுதி சடங்குகளும் இடம்பெறவுள்ளன. இதனை முன்னிட்டு பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் காலனித்துவ நாடுகளாக … Read more

ஜனாதிபதி அலுவலகத்தினால் அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட விசேட சுற்றறிக்கை

எந்தவொரு குடிமக்களும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினியாக இருக்கக்கூடாது என்றும், குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்றும் ஜனாதிபதி அலுவலகம் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சுற்றறிக்கை உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஊட்டச் சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அமைச்சுகள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கையில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாகவும், 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் … Read more

இலங்கைத் தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியாவில் கூடுதலான தொழில்வாய்ப்பு -சவுதி அரேபியத் தூதுவர்

பயிற்சிபெற்ற இலங்கை தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியாவில் அதிகளவான தொழில்வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் Khalid bin Hamoud Nasser Aldasam Alkahtani தெரிவித்துள்ளார். பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமது நாட்டுக்கு உதவுமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் ஹாலிட் பின் நஸீர் சமீபத்தில் தனது நற்சான்றிதழ்களை கையளித்தப்பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சந்த்தித்தார். இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போதே தூதுவர் இந்த விடயத்தைக் கூறினார்.பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கு சவுதி … Read more