பெற்றோல் , டீசலுடனான மூன்று கப்பல்கள்…..
பெற்றோல் மற்றும் டீசலுடனான மூன்று கப்பல்கள் நாட்டுக்கு வரவிருப்பதாக இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு கப்பல் எதிர்வரும் 13 அல்லது 14ஆம் திகதியில் நாட்டுக்கு வரவுள்ளது. இதேபோன்று இரண்டாவது கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி அல்லது 31ஆம் திகதி வரவுள்ளது. மூன்றாவது கப்பல் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி அல்லது 15ஆம் திகதி வரவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.