உடல் எடையை குறைக்க நினைப்பவரா நீங்கள்… இந்த உடற்பயிற்சி உபகரணங்கள் உதவியாக இருக்கும்!

Fitness Gadgets: தற்போது ஃபிட்னஸ் என்பது அனைவரும் அதிக கவனம் செலுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற உணவுமுறை, சீரற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் அதிக உடல் எடை பெறுவது, அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது என பல உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகமாகிவிட்டன. இதனால், மக்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.  இருப்பினும் சிலருக்கு தனியே உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வாய்ப்பில்லாததால் வீட்டிலேயே உடற்பயிற்சி உபகரணங்களை வைத்து பயிற்சி மேற்கொள்கின்றனர். குறிப்பாக, உடற்பயிற்சி வல்லுநர்கள், உடற்பயிற்சியில் … Read more

உங்கள் மொபைல் பேட்டரி நல்ல நிலையில் உள்ளதா… கண்டறிவது எப்படி?

Smartphone Hacks: இந்த காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு பல்வேறு வகையில் பிரச்னைகள் ஏற்படுகிறது என்றால், அதில் மொபைல், லேப்டாப் சார்ந்த மின்னணு சாதனங்களின் பிரச்னைகளும் அடக்கம். இப்போதெல்லாம் மொபைல், லேப்டாப்களை பிரச்னையில்லாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பல வழிகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் என எடுத்துக்கொண்டால் உங்கள் பேட்டரியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பலரும் கவனிப்பார்கள். நீண்ட நேரம் வீடியோ பார்த்தாலோ, பாட்டு கேட்டாலோ அல்லது கேம் விளையாடினாலோ பேட்டரி எந்தளவிற்கு தாக்குபிடிக்கிறது என்பதை பலரும் பார்ப்பார்கள். … Read more

Innova சிறப்பு எடிஷன் அறிமுகம்… 8 பேர் வரை அமரலாம் – என்னென்ன ஸ்பெஷல் பாருங்க!

Toyota Innova Hycross Limited Edition: டொயோட்டா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டொயோட்டா Rumion மாடல் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதில் 1.5 லிட்டர் எஞ்சின் உள்ளது. இதன் கட்டமைப்பு மாருதி சுசுகி எர்டிகாவை போல் இருப்பதாக கூறப்பட்டது. இந்த காரின் விலை 10.29 ரூபாய் லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.  இந்த காரில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேயை ஆதரிக்கிறது. ABD, Tow Alert மற்றும் … Read more

போலீசாரிடம் அபாரதம் செலுத்தவதை தவிர்க்கணுமா… கூகுள் மேப்ஸ் சொல்வதை கேளுங்கள்!

Google Maps Speed Limits: கூகுள் மேப்ஸ் பல்வேறு வசதிகளை வாகன ஓட்டிகளுக்கு வழங்கி வருகிறது. ஊர், திசை தெரியாத இடங்களிலும் கூட பலருக்கு வழிகாட்டியாக இருப்பது கூகுள் மேப்ஸ்தான். வீட்டில் இருந்து அலுவலகத்திற்கோ அல்லது வேறு எங்கோ செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்லவும் கூகுள் மேப்ஸ் உதவுகிறது.  கூகுள் நிறுவனத்தின் இந்த அமைப்பு வாகன ஒட்டிகளுக்கு அவர்கள் செல்லும் சாலையின் வேக வரம்பையும் காட்டுகிறது. அவர்கள் அதை மீறினால் அவர்களையும் எச்சரிக்கிறது. கூகுள் … Read more

டெக் உலகில் ட்விஸ்ட்… சாம் ஆல்ட்மேனை மைக்ரோசாப்ட் பக்கம் இழுத்த சத்யா நாதெல்லா – பின்னணி என்ன?

Sam Altman Microsoft: ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனம் Open AI. இந்நிறுவனம் கடந்த சனிக்கிழமை (நவ. 18) அன்று அதன் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேனை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றியது. மேலும், அவர் இந்த நிறுவனத்தை (OpenAI) சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதால் நிறுவனத்தின் நிர்வாகக் குழு இந்த நடவடிக்கை மேற்கொண்டது.  குழு வெளியிட்ட அறிக்கையில்,”OpenAI நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சாமின் பல பங்களிப்புகளுக்கு நன்றி. அதே நேரத்தில், நாம் … Read more

108MP கேமராவுடன் கூடிய 5G OnePlus போனில் 18,900 ரூபாய் தள்ளுபடி..! பம்பர் சலுகை..

அமேசானில் தற்போது எந்த சிறப்பு விற்பனையும் நடக்கவில்லை என்றாலும், அந்த ஆன்லைன் பிளாட்ஃபார்மில் பெரிய தள்ளுபடிகளுக்கு மட்டும் இன்னும் பஞ்சமில்லை. இதைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போனை மலிவான விலையில் வாங்கலாம். நீங்கள் OnePlus பிரியர் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. OnePlus -ன் மலிவான 108MP கேமரா கொண்ட ஃபோன் தற்போது பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி நீங்கள் அதை குறைந்த விலையில் வாங்கலாம். போனில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸை நீங்கள் … Read more

30 நாட்களுக்கு நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ இலவசம்..! 100 ஜிபி டேட்டா கிடைக்கும்: ஜியோ பிளான்

நெட்பிளிக்ஸ், அமேசான் ஒரு மாதம் இலவசம் மற்றும் 100 ஜிபி டேட்டாவையும் நீங்கள் பயன்படுத்தலாம். உங்களுக்கு 5ஜி டேட்டா ஸ்பீடு யூசர்களுக்கு கிடைக்கும்.  

வாட்ஸ்அப் வீடியோ கால் பேசும்போது லொகேஷனை மறைப்பது எப்படி?

இணையத்தைப் பயன்படுத்தும் போது, ​​உங்கள் ஐபி முகவரி உங்களின் அடையாளமாகச் செயல்படுகிறது. இதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து லொகேஷன் தகவல்களைச் சேகரிக்க முடியும். வாட்ஸ்அப்பின் உதவியுடன் இதைத் தடுக்க, மெட்டா நிறுவனம் சமீபத்தில் ஐபி ப்ரொடெக்ட் அம்சத்தை செயலியின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் அழைப்பின் போது ஐபி முகவரியை மற்றவர்களுக்குச் சென்றடைய அனுமதிக்காது.இது சிறந்த பிரைவசி பலனை வழங்குகிறது. வாட்ஸ்அப் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளின் போது, ​​​​வாடிக்கையாளர்களின் ஐபி முகவரி கசிந்துவிடும். … Read more

ஏர்டெல்லின் தீபாவளி பரிசு..! 84 நாட்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா – 15 OTT இலவசம்

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. மலிவு விலையில் சிறந்த பலன்களைக் கொண்ட திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், ஏர்டெல்லின் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் உங்களுக்கு சிறந்தது. சிறப்பு என்னவென்றால், இந்த திட்டங்களில் நீங்கள் பல OTT பயன்பாடுகளுக்கான இலவச அணுகலைப் பெறுவீர்கள். இது தவிர, நிறுவனம் இந்த திட்டங்களில் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டங்கள் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் இலவச எஸ்எம்எஸ் உடன் வருகின்றன. … Read more

குதூகலத்தில் இணைந்த கூகுள்… உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பக்கா டூடுல் – என்ன ஸ்பெஷல்?

Google Doodle IND vs AUS Final: கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று மிக முக்கிய நாளாகும். இன்று எங்கு திரும்பினாலும் உலகக் கோப்பை (ICC World Cup 2023) இறுதிப்போட்டி குறித்த பேச்சுகள்தான் இருக்கும். உலகக் கோப்பையை வெல்லப்போவது சொந்த மண்ணில் சூறாவளியை கிளப்பும் இந்தியாவா, உலகக் கோப்பையின் ஆஸ்திரேலியாவா என்ற கணிப்புகள்தான் எல்லா திசைகளிலும்…  அந்த வகையில், மக்களின் மனநிலை அறிந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் ரசிகர்களின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும் வகையில் ஒரு சிறப்பு … Read more