Pathaan Controversy : சமூக வலைதளங்கள் முழுவதும் தீய எண்ணங்கள்தான்… வாய் திறந்த ஷாருக் !

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா திரைப்பட விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். தற்போது, அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் பதான் திரைப்படத்தின் பாடல் தற்போது சர்ச்சையாகி வரும் நிலையில், அதுகுறித்து அவர் பேசியுள்ளார்.  விழா மேடையில் அவர் பேசியதாவது,”இத்தனை நாட்களாக நான் இங்கு வந்து உங்களோடு பேசவில்லை. இப்போது, உலகம் சாதாரணமாகிவிட்டது, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உலகம் என்ன சொன்னாலும், நான், நீ மற்றும் எல்லா நல்ல எண்ணம் கொண்ட … Read more

வெளிநாடுகளில் ‛வாரிசு' முன்பதிவு தொடங்கியது

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், தற்போது பிரமோசன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினியின் கபாலி, கமலின் விக்ரம் படங்களின் பிரமோசன்கள் ரயில்களில் செய்யப்பட்டது போன்று வாரிசு படத்தின் பிரமோசன்கள் மெட்ரோ ரயில்களில் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தின் இசை விழா வருகிற 24ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள அகிம்சா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தற்போது ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. … Read more

இளம் இயக்குனரை கிண்டலடித்தாரா மம்முட்டி ?

மலையாளத்தில் நஸ்ரியா, நிவின்பாலி நடித்த ஓம் சாந்தி ஓசானா மற்றும் டொவினோ தாமஸ் நடித்த சாராஸ் ஆகிய படங்களை இயக்கியவர் இளம் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். இன்னொரு பக்கம் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது 2018ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிகழ்வுகளை மையப்படுத்தி 2018 என்கிற பெயரிலேயே ஒரு படத்தை இயக்கியுள்ளார். இதில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தநிலையில் இந்தப்படத்தின் … Read more

இயக்குநரை உருவக்கேலி செய்த விவகாரம்: சர்ச்சைகளையடுத்து நடிகர் மம்மூட்டி வருத்தம்

டொவினோ தாமஸின் ‘2018’ பட டீசர் விழாவில் கலந்துகொண்ட பேசிய மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, இயக்குநரை உருவக் கேலி செய்ததற்காக கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தனது செயலுக்கு சமூகவலைத்தள பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான ஜூட் ஆண்டனி ஜோசப், எழுதி இயக்கியுள்ள படம் ‘2018’. கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 483 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காணாமல் போயினர். ஏராளமான … Read more

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய நடிகர்களில் விஜய்க்கு 15வது இடம்

ஒவ்வொரு வருடமும் கூகுள் தேடுதல் இணையதளம் அந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள், அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்கள் என டாப் 100 பட்டியல்களை வெளியிடுவது உண்டு. அந்தவகையில் இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 100 ஆசிய நடிகர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து 5 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் நடிகர் விஜய்க்கு 15 வது இடம் கிடைத்துள்ளது. சூர்யாவுக்கு 45வது இடமும் தனுசுக்கு 46வதுவது இடமும் கிடைத்துள்ளது. … Read more

தமிழகத்தின் அரசியல் வாரிசே… போஸ்டர் ஒட்டி சம்பவம் செய்த விஜய் ரசிகர்கள்!

தமிழ்நாட்டு அரசியலுக்கும், சினிமா துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர் ஆவார்கள். மேலும் நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டவர்கள் கட்சி நடத்தி வருகின்றனர். தென்னிந்தியாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜயக்கு தமிழக மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் விஜயின் பிறந்தநாள், படம் ரிலீஸ் ஆகும்போது அரசியல் சார்ந்த போஸ்டர்களை ஒட்டி விஜயை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி … Read more

மக்களிடம் நல்ல பெயரும், புகழும் அடைய வேண்டும் – அமைச்சர் உதயநிதியை வாழ்த்திய இளையராஜா

முதல்வர் ஸ்டாலினின் மகனும், எம்எல்ஏ.வுமான உதயநிதி நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக சுபமுகூர்த்த நன்னாளில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இசையமைப்பாளர் இளையராஜாவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : ‛‛வணக்கம், நான் இளையராஜா. அமைச்சர் உதயநிதி அவர்களே நீங்கள் பதவி ஏற்கும் நாளில் நான் வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட … Read more

தமிழ் சினிமாவில் இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கலக்கிய டாப் 10 தமிழ் படங்கள் #2022Rewind

கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு 2022-ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் உச்ச நடிகர்களின் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை நம்பிக்கையுடன் பல திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஜூன் மாதத்திற்குப் பிறகு ஏராளமான படங்கள் திரையரங்கை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு நாளும் தமிழ் சினிமா குறித்த செய்திகளை பார்த்து வரும் நிலையில், இன்று இந்தாண்டு அதிக வசூல் வேட்டை நடத்தியப் படங்கள் குறித்துப் பார்க்கலாம். 1. பொன்னியின் செல்வன் அமரர் கல்கியின் வரலாற்று புனைவான … Read more

திருப்பதிக்கு பின் கடப்பா தர்காவிற்கு ஏஆர் ரஹ்மான் உடன் சென்ற ரஜினி

கடப்பா : திருப்பதிக்கு மகள் ஐஸ்வர்யா உடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உடன் கடப்பாவில் உள்ள அமீன் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இருதினங்களுக்கு முன் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி, நேற்று இரவு திருப்பதி சென்றார். அங்கு டி.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து இன்று(டிச., … Read more

Dhanush: போடு வெடிய.. உறுதியான தனுஷ் – எச். வினோத் கூட்டணி: வேறலெவல் சம்பவம்.!

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கவனம் ஈர்த்தவர் எச். வினோத். நட்டி நடராஜ் நடிப்பில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. முதல் படத்திலயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் எச். வினோத். வசூல் மற்றும் விமர்சனரீதியாக அமோக வரவேற்பை பெற்றது இந்தப்படம். ‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கினார் எச். வினோத். கார்த்தி, ரகுல் … Read more