பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரிப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் வரையிலான மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மோடிக்கு சொந்தமான அசையும் சொத்துகளின் மதிப்பு கடந்த நிதியாண்டைவிட 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. ரூ.2.23 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பெரும்பாலும் வங்கி டெபாசிட்களாக உள்ளன.

கேரளாவில் தாயும், மகனும் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு மழை..!!

மலப்புரம்: கேரள மாநிலத்தில் தாயும், மகனும் அரசு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலப்புரத்தை அடுத்த அரிகோடு பகுதியை சேர்ந்தவர் 42 வயதான பிந்து. இவரது மகன் 24 வயதான விவேக். இருவரும் சமீபத்தில் கேரள அரசு பணியாளர் தேர்வை ஒன்றாக எழுதி தேர்ச்சி பெற்றனர். தாய் பிந்துவுக்கு கடைநிலை ஊழியர் பிரிவிலும், மகன் விவேக்கிற்கு கீழ்நிலை பிரிவிலும் வேலை கிடைத்திருக்கிறது. இவர்கள் இருவரும் விரைவில் அரசு பணியில் சேர உள்ளனர். கடந்த … Read more

நிதிஷ் குமாரின் ராஜினாமா முடிவு சிறப்பானது..! – அகிலேஷ் யாதவ் திடீர் பாராட்டு..!

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்திருப்பது சிறப்பான முடிவு என சமாஜ் வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் “இன்னும் பல மாநில கட்சிகளும் மக்களும் பாஜகவுக்கு எதிராக வெகுண்டு எழுவார்கள்” என்று கருது தெரிவித்து உள்ளார் அகிலேஷ் யாதவ். டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திலும் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து … Read more

10 நிமிடத்தில் 50 பாடல்கள்: சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற கோவை சிறுமி

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள்  ரமேஷ் ,சாலினி தம்பதியினர். இவர்களது ஐந்து வயது மகள் இனியா. கோவை  மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வரும் இனியா அபார திறன் கொண்டவர். அனைத்து வகை காய்கறிகள் –  பழங்கள் –  நிறங்கள் – மற்றும் பொருட்களின் பெயர்களை மிகச்சரியாக கூறினார். யூ.கே.ஜி பயின்று வரும் இனியா, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை இந்த நிலையில் 10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான … Read more

செஸ் ஒலிம்பியாட் இன்று நிறைவு விழா

சென்னை: சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நிறைவு விழா, இன்று நடக்கிறது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழா, ஜூலை 28ல், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடந்தது. இதில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின், … Read more

நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

சென்னை:  டிஎன்பிஎஸ்சி மூலம் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகர்ச்சியில்,  நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் மற்றும், பொதுப்பணித் துறையில் 144 இளநிலை வரைதொழில் அலுவலர் (சிவில்) பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் … Read more

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் அடித்ததால் தப்பிய பணம்

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடிய நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில ஆர்.எம்.ப்ளாசா என்ற வணிகவளாகம் உள்ளது. இன்று அதிகாலை இங்கு இயங்கிவரும் எச்.டி.எப்.சி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலிக்கவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் … Read more

கொழும்பு மாளிகையிலிருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்ச: வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமா?

இலங்கையில் வன்முறை தீவிரமடைந்துவரும் நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நேற்று காலையிலேயே மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற விவரம் ஏதுமில்லை. போராட்டமும் … Read more

ஆடிட்டர் வீட்டில் இருந்த ரூ.40 கோடி எங்கே? மண்வெட்டி கொலையாளி திகில் வாக்குமூலம்..!

சென்னை மயிலாப்பூரில் ஓட்டுனரால் கொன்று புதைக்கப்பட்ட ஆடிட்டர் தம்பதி வீட்டில் இருந்த 40 கோடி ரூபாய் எங்கே? என்று காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மண்வெட்டி கணையை ஆயுதமாக தேர்ந்தெடுத்த கொலையாளியின் வாக்கு மூலம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டரும் ஐ.டி. கம்பெனி அதிபருமான ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோரை நகை பணத்துக்காக அடித்து கொலை செய்து , பண்ணை வீட்டில் புதைத்ததாக கார் ஓட்டுனர் கிருஷ்ணா அவனது கூட்டாளியுடன் … Read more

விக்னேஷ் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி காவலர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணையை தொடர முதலமைச்சர் உத்தரவு

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி, தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.   Source link