திருத்தணி: கழுத்தறுக்கப்பட்டு இளம்பெண் கொலை; ஆண் நண்பர் சிக்கியதன் பின்னணி என்ன?
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகேயுள்ள கனகம்மாசத்திரத்தைச் சேர்ந்தவர் சுசிலா (34). இவர் கணவரைப் பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக தனியாக இரண்டு மகன்களுடன் வசித்துவந்தார். இவருக்கும், முத்துக்கொண்டாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரஞ்சித், ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். இந்த நிலையில், திருத்தணி காந்தி சாலைப் பகுதியில் சுசிலா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இந்தத் தகவல் கிடைத்ததும் போலீஸாரும், அந்தப் பகுதியில் இருப்பவர்களும் சுசிலாவை மீட்டு, திருத்தணி அரசு … Read more