`காஸாவில் பிணைக் கைதிகள் இருக்கும் இடம்’ – இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பும் பாலஸ்தீனத்தின் மறுப்பும்!
காஸா பகுதியை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்குமிடையே பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மோதலின் உச்சக்கட்டமாக, இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது ஹமாஸ். அதில், இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேலும், இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர், அங்கிருந்து 240-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதற்கு, எதிர்ப் போர் தொடுத்த இஸ்ரேல், காஸா மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவமனைகள் உட்பட ஏராளமான கட்டடங்களைத் தரைமட்டமாக்கியிருக்கிறது. தாக்கப்பட்ட … Read more