தனது உயிரை பணயம் வைத்து பயணியை காப்பாற்றிய ரெயில்வே காவலர்

காந்திநகர், குஜராத்தில் உள்ள வாபி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பயணி ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து அடுத்த நடைமேடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவர் தண்டவாளத்தின் இடையே தடுமாறி விழுந்தார். அந்த சமயத்தில் சூரத்-பாந்த்ரா டெர்மினஸ் இன்டர்சிட்டி ரெயில் அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. இதைக் கவனித்த வீராபாய் மேரு என்ற ரெயில்வே காவலர், நடைமேடையில் இருந்து குதித்து அந்த நபரை நோக்கி விரைந்து சென்றார். மின்னல் வேகத்தில் அந்த நபரை பிடித்து தண்டவாளத்திலிருந்து இழுக்க, … Read more

Mahindra XUV.e9 spied – மஹிந்திரா XUV.e9 கூபே எலக்ட்ரிக் எஸ்யூவி ஸ்பை படங்கள் வெளியானது

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி வரிசையில் வரவிருக்கும் XUV.e9 கூபே ரக எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் வெளியாகியுள்ளது. தோற்ற அமைப்பில் முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி. இ9 கான்செப்ட் போலவே உள்ளது. ஏற்கனவே மஹிந்திரா கொண்டு வரவுள்ள Born எலக்ட்ரிக்  மற்றும் XUV.e வரிசைகளில் வரவுள்ள கார்களில் வெளியீடு தொடர்பான காலத்தை வெளியிட்டுள்ளது. கூபே ரக ஸ்டைலை கொண்ட மாடல் ஏப்ரல் 2025 விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற XUV.e9 தற்போதுள்ள எந்த பெட்ரோல் … Read more

`இந்திரா காந்தி பிறந்தநாளில் போட்டி நடந்ததே, இந்தியாவின் தோல்விக்குக் காரணம்!' – அஸ்ஸாம் முதல்வர்

சமீபத்தில் நடந்து முடிந்த, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரில், அரையிறுதிவரை தோற்காமல், 2011 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் எப்படி இந்தியா தோற்றதோ, அதேபோலவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்தியா. உலகக் கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா இதனால், இந்திய அணிக்கு … Read more

அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்து பதிவுத்துறை உத்தரவு…

தமிழகம் முழுவதும் இனி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிமனை (UDS) மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு கூட்டு மதிப்பில் ஒரே பத்திரப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுச் செயலாளர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் சில மாநிலங்களில் உள்ளது போல் அடுக்குமாடி குறியிருப்புகளுக்கு கூட்டுமதிப்பில் ஒரே பத்திரப்பதிவு முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் அடிப்படையில் இனி அடிமனை மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக இரண்டு பத்திரங்கள் பதிவு நடவடிக்கை இந்த … Read more

இந்திரா காந்தியை இழுத்த பாஜக.. இந்திய கிரிக்கெட் அணி தோல்விக்கு அசாம் முதல்வர் சொன்ன அடடே காரணம்!

திஸ்பூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், “இந்திரா காந்தி பிறந்தநாளில் போட்டி நடந்ததே தோல்விக்கு காரணம்” என அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹமந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். கடந்த 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. Source Link

பிரதமர் மோடி குறித்த பேச்சு: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி, பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வரும் 25 ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : ராகுல் காந்தி  பிரதமர் மோடி  தேர்தல் ஆணையம் 

Triumph Speed 400 – டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மலேசியாவில் அறிமுகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X பைக்குகளை மலேசியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இரு மாடலும் 400cc என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. மலேசியாவில் பைக்குகளின் விலை ஸ்பீட் 400 RM 26,900 (ரூ. 4.78 லட்சம்) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400X RM 29,900 (ரூ. 5.31 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பைக்குகள் முறையே ரூ.2.33 லட்சம் மற்றும் ரூ. 2.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். Triumph Speed … Read more

Prakash Raj: ரூ.100 கோடி மோசடி விவகாரம்; பிரகாஷ் ராஜுக்கு சம்மன் அனுப்பிய ED – பின்னணி என்ன?!

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரணவ் ஜூவல்லர்ஸ், மிக குறுகிய காலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தன் கிளைகளைப் பரப்பியது. பழைய தங்க நகைகளைத் தங்களிடம் கொடுத்தால், ஓராண்டு கழித்து, எந்தவிதச் செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்குச் சமமாகப் புதிய நகைகளை வாங்கிச் செல்லலாம், பவுனுக்கு 4,000 ரூபாய் வரை சேமிக்கலாம் என பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார் ஆகிய சினிமா பிரபலங்களை வைத்து, இந்த நிறுவனம் விளம்பரம் … Read more

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து எம்.எல்.எம். மூலம் மக்களிடம் இருந்து திரட்டிய சுமார் 100 கோடி ரூபாயை வேறு நிறுவனங்களுக்கு மாற்றி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக பிரணவ் ஜூவல்லர்ஸ் மீது சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அந்நிறுவனத்தின் விளம்பர தூதுவராக செயல்பட்டுவந்த நடிகர் பிரகாஷ் ராஜை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.