பிரதமர் மோடி குறித்த பேச்சு: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி, பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வரும் 25 ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : ராகுல் காந்தி  பிரதமர் மோடி  தேர்தல் ஆணையம் 

Triumph Speed 400 – டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மலேசியாவில் அறிமுகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X பைக்குகளை மலேசியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இரு மாடலும் 400cc என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. மலேசியாவில் பைக்குகளின் விலை ஸ்பீட் 400 RM 26,900 (ரூ. 4.78 லட்சம்) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400X RM 29,900 (ரூ. 5.31 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பைக்குகள் முறையே ரூ.2.33 லட்சம் மற்றும் ரூ. 2.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். Triumph Speed … Read more

Prakash Raj: ரூ.100 கோடி மோசடி விவகாரம்; பிரகாஷ் ராஜுக்கு சம்மன் அனுப்பிய ED – பின்னணி என்ன?!

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரணவ் ஜூவல்லர்ஸ், மிக குறுகிய காலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தன் கிளைகளைப் பரப்பியது. பழைய தங்க நகைகளைத் தங்களிடம் கொடுத்தால், ஓராண்டு கழித்து, எந்தவிதச் செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்குச் சமமாகப் புதிய நகைகளை வாங்கிச் செல்லலாம், பவுனுக்கு 4,000 ரூபாய் வரை சேமிக்கலாம் என பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார் ஆகிய சினிமா பிரபலங்களை வைத்து, இந்த நிறுவனம் விளம்பரம் … Read more

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து எம்.எல்.எம். மூலம் மக்களிடம் இருந்து திரட்டிய சுமார் 100 கோடி ரூபாயை வேறு நிறுவனங்களுக்கு மாற்றி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக பிரணவ் ஜூவல்லர்ஸ் மீது சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அந்நிறுவனத்தின் விளம்பர தூதுவராக செயல்பட்டுவந்த நடிகர் பிரகாஷ் ராஜை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூருக்கு போகாத பிரதமர்.. கிரிக்கெட் மேட்சுக்கு மட்டும் போவாராம்.. பிரியங்கா காந்தி கடும் தாக்கு

ஜெய்ப்பூர்: மணிப்பூரில் மாதக்கணக்கில் வன்முறை நடந்துகொண்டிருக்கையில் அங்கு செல்லாத பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் Source Link

Draupadi Murmu, Justice Chandrachud: Ambedkar statue in the Supreme Court complex | உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அரசியலமைப்பு மற்றும் தேசிய சட்ட தினத்தன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த, 1949, நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26 முதல் நடைமுறைக்கு வந்தது.இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான, நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் … Read more

பா.ஜ.க. 15 தொகுதிகளில் வெற்றி பெறுமா? என பார்ப்போம்: பூபேஷ் பாகெல்

ராய்ப்பூர், சத்தீஷ்காரில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தலில் 70 தொகுதிகளுக்கும் என மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது. முதல்கட்ட தேர்தலையொட்டி பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி ரமன் சிங் பேசும்போது, 20 தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். 2 கட்ட தேர்தல் முடிந்த பின்னர் அவர் கூறும்போது, சத்தீஷ்காரில் 55 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். … Read more

Green Hydrogen – பசுமை ஹைட்ரஜன் மையமாக தமிழ்நாட்டை உருவாக்க முடிவு – டிஆர்பி ராஜா

எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பிற்கு முன்னிரிமை வழங்கும் தமிழ்நாடு அரசு அடுத்து, கார்பன் உமிழ்வை குறைக்கின்ற பசுமை ஹைட்ரஜன் மையமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், பயன்பாட்டில் உள்ள மையங்களின் உற்பத்தி திறனை 50 முதல் 75 % உயர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். TN Green Hydrogen Hub சென்னையில் ஆட்டோகார் புரபெஷனல் இதழ் நடத்திய இந்தியா இவி மாநாட்டில் பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசுகையில்,  … Read more

துருவ நட்சத்திரம்: `இதைச் செய்தால்தான், படம் நாளை ரிலீஸ்' – கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கோர்ட் கண்டிஷன்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில், விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட நிதிச் சிக்கல் காரணமாக, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. அத்துடன் படத்தை வெளியிடுவதிலும் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை (நவம்பர் 24-ம் தேதி) படம் வெளியாகும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் … Read more

பயணியை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்த ரயில்வே காவலர்

வாபி ஒரு ரயில்வே காவலர் தனது உயிரை பணயம் வைத்து பயணியைக் காப்பாற்றி உள்ளார்.. குஜராத் மாநிலத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பயணி ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காகத் தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அவர் அப்போது தடுமாறி தண்டவாளத்தின் இடையே விழுந்துள்ளார். அதே நேரத்தில் அந்த தண்டவாளத்தில் சூரத்-பாந்த்ரா டெர்மினஸ் இன்டர்சிட்டி ரயில் விரைந்து வந்துகொண்டிருந்தது. வீராபாய் மேரு என்ற ரயில்வே காவலர் இதைக் கவனித்துள்ளார். அவர் நடைமேடையில் இருந்து குதித்து அந்த நபரை நோக்கி … Read more