திருச்செந்தூர்: மாசித் திருவிழா வரும் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்; ஏற்பாடுகள் தீவிரம்!
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள். மற்ற கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறைதான் பிரம்மோற்சவம் நடக்கும். ஆனால், இங்குதான் ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா என ஓர் ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. சிவப்பு சாத்தி திருக்கோலம் ஆவணித்திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் … Read more