6 விதமான கஸ்டமைஸ் ஹோண்டா CB350 பைக் ஆக்செரீஸ் அறிமுகம்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் H’ness CB350 மற்றும் CB350 RS பைக்குகளுக்கு 6 விதமான கஸ்டமைஸ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. கஃபே ரேசர் ஸ்டைல் ஆக்செரீஸ் இரண்டு பைக்கிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக்செரீஸ் பேக் ரூ.7,500 முதல் ரூ.22,500 வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இரு பைக்குகளில் பொதுவாக 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 RPM-ல் 30 என்எம் டார்க் … Read more

ஈரோடு கிழக்கில் படுதோல்வி: தே.மு.தி.க மீண்டெழுமா?!

`ஈரோடு தொகுதி தே.மு.தி.க-விற்கு புதிதல்ல. 2011-ல் தேர்தலில் தே.மு.தி.க வெற்றிபெற்ற தொகுதிதான் இது. பெரியார் மண்ணில் கட்சி துவங்கப்படும் என்று கேப்டன் தெரிவித்தார். நடிகராக இருந்தபோதே, ஈரோடு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார். எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க நிச்சயம் வெற்றி பெறும்’ எனக்கூறி அதீத நம்பிக்கையோடு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் பிரேமலதா விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவில் தே.மு.தி.க வேட்பாளர் ஆனந்த் டெபாசிட் இழந்ததோடு வெறும் 1,432 வாக்குகள் மட்டுமே பெற்று … Read more

டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை..

சென்னை: டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் குறித்து தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மும்முதான மின்சாரமும் பலருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் வழங்கப்படும் நேரம்  குறித்து  தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெடிளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு (எஸ்.எஸ்.) துணை மின் நிலையத்திலும் இரண்டு (குரூப் 1, குரூப் 2 … Read more

சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது: பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை

சென்னை: சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது; அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்களில் எந்த வகையிலும் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

“நம் மாநிலத்தில் வன்முறையை விதைக்கும் பாஜக-வுக்குச் சரியான பாடம் புகட்டுவோம்'' – ஜோதிமணி

`அதிமுக பாஜக-போல் பிரிந்து வாழக் கூடாது; திமுக கூட்டணிபோல் சேர்ந்து வாழணும்’ – உதயநிதியின் வாழ்த்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளிகளாக இருக்கும் வட மாநிலத்தவர்கள், தமிழர்களின் தாக்குதல்களுக்கு பயந்து, தங்களது சொந்த மாநிலத்துக்கு செல்வதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. இதுபற்றி, ‘அப்படி எங்கும் நடக்கவில்லை. அது வதந்தி’ என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது பற்றி கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்.பி ஜோதிமணி, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு … Read more

நிச்சயம் செய்த பெண்ணை கனடா அனுப்பிய மணமகன்: மணமகளின் செயலால் அதிர்ந்த குடும்பத்தினர்

இளம்பெண் ஒருவரை நிச்சயம் செய்த நபர் ஒருவர், பல இலட்சம் செலவு செய்து அவரை கனடா அனுப்பிய நிலையில், அந்தப் பெண் அவரை விட்டு விட்டு வேறொரு நபரை திருமணம் செய்ததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பொலிசில் புகாரளித்துள்ளனர். 10 இலட்சம் செலவு செய்து நிச்சயம் செய்த பெண்ணை கனடா அனுப்பிய நபர் இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Lapran என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங்குக்கும் லூதியானாவைச் சேர்ந்த ஹர்ப்ரீத் கௌர் என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. … Read more

குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை காண இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

நாகர்கோவில்: குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை காண இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் பாறைக்க அருகே  133 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மறைந்த கருணாநிதியால் கடந்த  2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விவகானந்தர் பாறையை பார்வையிட செல்லும் சுற்றுலா … Read more

மக்களுக்கு சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும்: ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

மதுரை: அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மக்களுக்கு சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும் என மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான கள ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உள்ளது என முதல்வர் தெரிவித்தார்.     

“வெளிநாட்டு பயணங்களின்போது நாட்டுக்கு எதிராக அவதூறு செய்தவர் பிரதமர் மோடி!" – ராகுல் சாடல்

`வெளிநாட்டில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த ராகுல் காந்தி முயல்கிறார்’ என மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானும், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் கடுமையாகச் சாடினர். இதற்கு பதிலளிக்கும்விதமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, `வெளிநாட்டு பயணத்தின்போது நாட்டுக்கு அவதூறு செய்தவர், பிரதமர் நரேந்திர மோடிதான்’ எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் (ஐ.ஜே.ஏ) ஏற்பாடு செய்திருந்த `இந்தியா இன்சைட்ஸ்’ நிகழ்ச்சியில் பேசுகையில், “கேம்பிரிட்ஜில் நான் நிகழ்த்திய … Read more

உக்ரைனை அடுத்து… புகையும் இன்னொரு போர்: பேரிழப்பே மிஞ்சும் என நிபுணர்கள் எச்சரிக்கை

தைவான் மீதான சீனாவின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடி தரும் நிலையில் தற்போது அமெரிக்கா இல்லை என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தைவான் மீது போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், இரண்டாம் உலக போர் போன்ற மிக மோசமான சம்பவங்கள் நடந்தேறும் என்றார் சிறந்த வெளியுறவுக் கொள்கை நிபுணரான Michael O’Hanlon. @AFP தைவான் தீவை எந்த விலை கொடுத்தும் தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்துடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் … Read more