நெல்லை சிப்காட்டில் வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 30 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்

நெல்லை: நெல்லை சிப்காட்டில் வட்டாட்சியர் வீட்டில் மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர். நிலம் எடுப்பு வட்டாட்சியர் சந்திரன் வீட்டில் ரூ.30 லட்சம், ஆவணங்களை லஞ்சஒழிப்பு துறை பறிமுதல் செய்தனர்.

ஆன்லைன் சூதாட்டம்: தேவையான சட்டங்கள் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது: மத்திய அரசு

புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் பார்த்திபன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார். தினத்தந்தி Related Tags : ஆன்லைன் சூதாட்டம் மத்திய அரசு

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்ற மாநிலஅரசுக்கு அதிகாரம் உண்டு! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த மட்டுமே சட்டம்  இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க மாநிலஅரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. மக்களவையில் திமுக எம்.பி. பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு  மத்திய, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்தார். அப்போது; பந்தயம், சூதாட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் 34-வது பிரிவில் இடம்பெற்றுள்ளது. 7-வது அட்டவணை, 34-வது … Read more

'வானத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள்' சர்வதேச நீதிமன்றத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்.! முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல்

நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப் போவதாக முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல் விடுத்துள்ளார். சர்வதேச நீதிமன்றத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் (Dmitry Medvedev), திங்களன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏவுகணை வீசி தாக்கவுள்ளதாக அச்சுறுத்தினார். அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து அவர் … Read more

கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கொலை: கொலையாளி நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகளின் கணவரை கொலை செய்ததாக ஒப்புதல் அளித்தார். மகளின் காதல் திருமணமத்தால் விரக்தியில் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்

டூ விட்ட மனசு.. பழம் விட்டு சேர்ந்தாச்சு! – இல்லத்தரசி ஷேரிங்ஸ் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சிறுவர்கள்‌ விளையாடும் மாலை நேரங்களில், பூங்காவில் நேரம் செலவிடுவதென்பது அனைவருக்குமான‌ மன ஆரோக்கியத்திற்கான‌ வழி. நான்‌ கண்ட ரசித்து நிகழ்வுகள் சில .. பகிர்கிறேன். 1. மூன்று‌ அல்லது நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவர் சறுக்குப்பலகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு குழந்தையோடு அவனுடைய … Read more

முடிசூட்டு விழாவை முன்னிட்டு பிரித்தானிய மன்னருக்கு விடுக்கப்பட்ட பயங்கரவாத எச்சரிக்கை!

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கான அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மன்னருக்கு எச்சரிக்கை வின்ட்சர் கோட்டையில் மே மாதம் 6-ஆம் திகதி நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க அரச நிகழ்வைச் சுற்றி பல அச்சுறுத்தல்களுடன் பயங்கரவாத செயல்களுக்கான கணிசமான அபாயத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கலாம் என பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் (King Charles III) எச்சரிக்கப்பட்டார். முன்னாள் அரச மெய்க்காப்பாளர் சைமன் மோர்கன் (Simon Morgan) இவ்வாறான கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். … Read more

நாடு முழுவதும் வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்!

சென்னை: புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் நர்சரி முதல் 2ம் வகுப்பு வரை புதிய கல்வி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் ‘5 ஆண்டு கட்டமைப்பு’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி … Read more