1349/2 எனும் நான் – 2 : `ஒரு பரிசு; ஒரு கொலை; ஓர் ஒப்பந்தம் '- சிங்கம்பட்டி ஜமீனும் மாஞ்சோலையும்!
தனிப்பட்ட ஒருவரது நடவடிக்கையின் விளைவாக, பல நேரங்களில், மொத்த குடும்பமும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். அதுபோல, சமூகத்தில் எங்கோ, எவரோ செய்யும் ஒரு செயல், அதில் சம்பந்தம் இல்லாத பலரது வாழ்விலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும். அவ்வாறு, சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தில் நடந்த இரு நிகழ்வுகள், துளி அளவும் தொடர்பில்லாத 10,000க்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த இரு நிகழ்வுகளே சிங்கம்பட்டி குரூப்பில் அமைந்திருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியின் வரலாற்றை இயற்றின. … Read more