குற்றால அருவியில் விழுந்த சிறுமியைக் காப்பாற்றிய இளைஞர்; டிரைவராக நியமித்த தூத்துக்குடி ஆட்சியர்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். கார் டிரைவரான இவர், கடந்த ஜனவரி 29-ம் தேதி, காரில் சவாரி ஏற்றிக் கொண்டு பழைய குற்றாலத்துக்குச் சென்றுள்ளார். அதே நாளில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், தனது குடும்பத்தினருடன் பழைய குற்றாலத்துக்குக் குளிப்பதற்காக வந்துள்ளார். கிருஷ்ணன், தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்தார். கார் டிரைவராக நியமிக்கப்பட்ட விஜயகுமார் அவர்களின் 4 வயது மகள் ஹரிணி, தண்ணீரைப் பார்த்ததும் ஆர்வத்தில் அருவியின் முன்புறமுள்ள சிறிய … Read more

PSG அணியில் இருந்து வெளியேறும் மெஸ்ஸி: அவரது புதிய அணியின் பெயர் கசிந்தது

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி புதிய அணி ஒன்றில் மிக விரைவில் இணையவிருக்கிறார் என்ற தகவலை அவரது நெருங்கிய நபர் ஒருவர் கசியவிட்டுள்ளார். PSG அணியில் இருந்து லியோனல் மெஸ்ஸிக்கும் அவரது நண்பர் செர்ஜியோ அகுவெரோவுக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடலில், குறித்த தகவலை மெஸ்ஸி குறிப்பிட்டதாகவும் தெரியவந்துள்ளது. @getty இந்த கால்பந்து சீஸன் முடிவுக்கு வரும்போது PSG அணியில் இருந்து மெஸ்ஸி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. PSG அணியில் அவரது ஒப்பந்தம் முடிவுக்கும் … Read more

டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே குளறுபடிக்கு காரணம் – ரத்து செய்க! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு,

சென்னை: டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே காரணம் குளறுபடிக்கு காரணம்  என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதுபோல டிஎன்பிஎஸ்சியின் குளறுபடி காரணமாக, 55,000 தேர்வர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். இன்று நடைபெற்ற  டி.என்.பி.எஸ்.சி தொகுதி இரண்டுக்கான முதன்மைத் தேர்வை நடத்துவதில் ஏராளமான ‘குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தேர்வு தாமதமாக தொடங்கியது. … Read more

ராமநாதபுரம் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கீழாம்பல் தொடக்க பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கீழாம்பல் தொடக்க பள்ளி ஆசிரியர் ராமசந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதால் பரமக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அரசு வழங்கிய தேசிய விருதை திரும்ப பெற கோரி மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

எதிர்காலத்தை மனதில் வைத்து புதிய கல்விக் கொள்கை உருவாக்கினோம்: பிரதமர் மோடி| We made a new education policy keeping the future in mind: PM Modi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: புதிய கல்விக் கொள்கை முறை எதிர்காலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: புதிய கல்விக் கொள்கை முறை எதிர்காலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி முறை முந்தைய காலங்களில் கடினத்தன்மை கொண்டதாக இருந்தது. ஆனால் புதிய கல்வி கொள்கை அதை மாற்றி அமைத்துள்ளது. ஆசிரியர்களின் ஆதரவுகள் எங்களுக்கு அதிகம். இது நமது கல்வித்துறை வளர்ச்சிக்கு வழி வகுத்தது. ஆசிரியர்கள் … Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலா 10 கிலோ அரிசி இலவசம்

பெங்களூரு- பசியால் வாடக்கூடாது கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ அரிசி இலவசமாக வழங்கினோம். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அதை 5 கிலோவாக குறைத்துவிட்டது. இதை நான் எதிர்த்தேன். ஆனால் பா.ஜனதா தனது முடிவை மாற்றவில்லை. கொரோனா நெருக்கடி காலத்தில் அன்ன பாக்கிய திட்டம் … Read more

நீட்: `அதிமுக அரசு தாக்கல் செய்த ரிட் மனுவை வாபஸ் பெற்ற தமிழக அரசு' – அமைச்சர் தரும் விளக்கம் என்ன?

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது மத்திய அரசால், மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்விலிருந்து விலக்கு கொண்டுவருவோம் எனக் கூறியது. அதன்படியே சட்டமன்றத்திலும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி, ஒப்புதல் பெறவேண்டி மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. நீட் ஆனால் இதுநாள் வரையில் அந்த மசோதா, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் முடங்கியே கிடக்கிறது. இந்த நிலையில், நீட் தேர்வு கட்டாயம் … Read more

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த சூப்பரான பானத்தை குடிங்க! மளமளவென தொப்பை இறங்குமாம்

அனைத்து மக்களுக்கும் தொப்பையானது எடை அதிகரிப்பின் விளைவாக ஏற்படுவதில்லை .  தவறான உணவு, மதுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை , தூக்கமின்மை,நார்ச்சத்து குறைந்த உணவு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் தொப்பை அதிகரிக்கின்றன. தொப்பையை வீட்டில் இருந்தவாறே குறைக்க இந்த பானத்தை இலகுவாக தயார் செய்து குடித்து வந்தால் சில நாட்களிலேயே குறைத்துவிடலாம்.  தேவையான பொருட்கள் தண்ணீர் – 2கப் சீரகம் – 1தே .கரண்டி இஞ்சி – சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். எலுமிச்சை … Read more

தேர்தல் அலுவலருக்கு ரூ.1கோடி பரிசு: ஈரோடு கிழக்கு தொகுதியை அதகளப்படுத்தும் போஸ்டர்

ஈரோடு கிழக்கு தொகுதியில்  வாக்காளர்களுக்கு இலவசங்கள், பணம் வாரி இறைக்கப்பட்டு வரும் நிலையில், அதுதொடர்பாக ராஜேஸ் கண்ணன் என்பவர் ஒட்டியுள்ள  போஸ்டர் அதகளப்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்ளிலும் வைரலாகி வருகிறது. நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு நாளை மறுதினம்  நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) முடிவடையவுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் உள்பட அரசியல் கட்சியினரும் இறுதிக்கட்ட, பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி யுள்ளனர். … Read more

ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனை: சோனியா காந்தி

டெல்லி: ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளதாக எம்.பி. சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த நாட்டுக்கும் காங்கிரசுக்கும் இது சவாலான நேரம் என தெரிவித்த சோனியா காந்தி பாஜக, ஆர்.எஸ்.எஸ். சேர்ந்து நாட்டில் உள்ள நிறுவனங்களை நாசமாக்கி வருகின்றனர் என்று அவர் கூறினார்.