அடுத்த 3 மணி நேரத்தில் குமரி, நெல்லை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், குமரி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? – சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

புதுடெல்லி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இடையீட்டு மனு இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் … Read more

அயோத்தியில் ராமஜென்ம பூமி வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு தீவிரம்

அயோத்தி, உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் உள்ளிட்ட ராமஜென்ம பூமி வளாகத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அயோத்தியின் ராம்கோட் பகுதியில் வசித்து வரும் மனோஜ் என்பவரின் போனுக்கு அழைத்த அவர், அந்த வளாகத்தை வியாழக்கிழமை (நேற்று) காலை 10 மணிக்கு தகர்க்கப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனே இது குறித்து மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. … Read more

சிவகாசி: கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்களிடம் 27 சவரன் நகை திருட்டு – கைவரிசை காட்டிய திருடர்கள்

சிவகாசியில் பிரசித்திப்பெற்ற பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்தவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி, அசாதம்பாவிதங்கள்‌ ஏற்படாத வண்ணம் தடுக்கும்வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. பக்தர்களின் ஒருபகுதி இந்நிலையில் பக்தர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்மநபர்கள் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த சிவகாசியை சேர்ந்த 6 பெண்களிடம் மொத்தம் 27 சவரன் தங்க நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை … Read more

பிரபல இயக்குநர், நடிகர் கே.விஸ்வநாத் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகரான கே.விஸ்வநாத் மரணமடைந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பழம்பெரும் இயக்குநர் தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் கே. விஸ்வநாத். இயக்குநராக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவரது முழுப்பெயர் காசிநாதுனி விஸ்வநாத் ஆகும். இவர் இயக்கிய சங்கராபரணம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், பல விருதுகளை வாங்கிக் குவித்தது. … Read more

பிப்ரவரி 03: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 258-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 258-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

ஹைதராபாத்: மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 93. பிரபல இயக்குநர் கே விஸ்வநாத், தமிழில் நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. தெலுங்குத் திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் உருவான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), … Read more

வெளிநாடு ஒன்றில் கனடாவின் புதிய தூதரக ஜெனரலாக மூத்த பத்திரிகையாளர்! பிரதமர் ட்ரூடோ கூறிய வார்த்தைகள்

நியூயார்க்கில் உள்ள எங்களின் புதிய தூதரக ஜெனரலாக, கனேடியர்களுக்கு டாம் கிளார்க் தொடர்ந்து சேவை செய்வார் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். டாம் கிளார்க் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கனடாவின் கான்சல் ஜெனரல், பாஸ்போர்ட், விசா மற்றும் குடிவரவு சேவைகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களுக்கு ராஜதந்திர சேவைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த அலுவலகம் ஆவணங்களை அறிவிக்கவும், வெளிநாட்டு படிப்புக்கான குடியேற்ற சேவைகளை வழங்கவும் மற்றும் கனேடியர்கள் வெளிநாட்டில் இருந்து வாக்களிக்கவும் உதவும். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,766,398 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,766,398 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 675,624,217 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 647,947,278 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,886 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில் பழனிசாமி தரப்புக்கு… அதிர்ச்சி!| ADMK, Will Palaniswami side… shock!

அ.தி.மு.க., விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த பதில், பழனிசாமி தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட, ஜூலை 11 பொதுக் குழுவை ஏற்கவில்லை என்றும், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து, தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், தேர்தல் ஆணையம் ‘பளிச்’ பதில் அளித்துள்ளது. அ.தி.மு.க.,வில் பழனி சாமி தரப்பினர், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்திய பொதுக் குழு … Read more