மாதவரம் பொன்னியம்மன்மேடு மதரசாவில் இருந்து மீட்கப்பட்ட 12 பீகார் மாணவர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு…

சென்னை: பீகாரில் அழைத்து வரப்பட்டு, சென்னை மாதவரம் அருகே உள்ள பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள இஸ்லாமிய மதரஸாவில் 2 மாதங்களாக 12 சிறுவர்கள் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நிறுவனர்கள் மீட்கப்பட்டு, சொந்த மாநிலமான பீகாருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மதரஸா பள்ளிகளில் சிறுவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன. ஆனால், அதை மரஸாக்கள் மறுத்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாதவரம் பகுதியில் … Read more

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு..!!

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருமலை கூடலில் பைக் மீது லாரி மோதியதில் பிளஸ் 2 மாணவி அதிஷா உயிரிழந்தார். பரீட்சைக்கு சென்றுவிட்டு தந்தையுடன் பைக்கில் வீடு திரும்பும்போது லாரி மோதி மாணவி பலியாகினார்; ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

"தேசிய பதவிக்கான கனவு; கண்மூடிக் கொண்டு கேரள அரசின் அத்துமீறலை அனுமதிக்கிறார் ஸ்டாலின்!" – அண்ணாமலை

நாகர்கோவில், தேனி மாவட்ட பகுதிகளில் கேரளா அரசு, சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தியிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திறமையாகச் சுரண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சியிடம், மண்டியிடும் திறனற்ற அரசு தி.மு.க. கேரளா அரசு டிஜிட்டல் நில அளவீட்டு திட்டம் `என்ட்டே பூமி’ என்ற பெயரில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் நில அளவீடு செய்து, தங்களுடைய கேரளா மாநில … Read more

திரும்பி நின்ற மெஸ்ஸி! ஓடி வந்து கட்டிபிடித்து உணர்ச்சிவசப்பட்ட தாயார்.. வைரல் வீடியோ

கால்பந்து உலகக் கோப்பை தொடரை அர்ஜென்டினா வென்ற பின்னர் மைதானத்தில் மெஸ்ஸியை தேடி வந்து அவரது தாயார் கட்டிபிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உணர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது. மெஸ்ஸி அபாரம் 2022 கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரை வென்று அர்ஜென்டினா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது. இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அபாரமான 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அர்ஜென்டினா வெற்றியை தொடர்ந்து மெஸ்ஸி மைதானத்தில் அங்குமிங்கும் மகிழ்ச்சியில் நடந்தபடி இருந்தார். Messi’s mother comes and … Read more

‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்கான ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை, கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் வகையில்  தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்காக ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.  தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட … Read more

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலுங்கு படமான உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் உரிமையை விஜய்சேதுபதி வாங்கியதாக தகவல் வெளியானது. தனது கதை திருடப்பட்டு உப்பெனா படம் உருவாக்கப்பட்டதாக தேனியைச் சேர்ந்த உதவி இயக்குனர் எஸ்.யூ.டல்ஹவுசி பிரபு மனு அளித்துள்ளார்.

100 நாள் வேலை திட்டம்: அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம் – திட்டப்பணிகள் முறையாக நடக்காதது ஏன்?

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது தமிழகத்தில் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்துள்ளது. இதற்குத் தொடக்கமாக அமைந்திருப்பதே தமிழக அரசு மீது நீதிமன்றத்திற்கு எழுந்த அதிருப்தி தான். தென்காசியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், 100 நாள் வேலை திட்டம் தொடர்பாகப் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணையில், தனியார் நிலத்தில் விவசாய வேலையில் ஊழியர்கள் பணியாற்ற அனுமதித்தது உறுதியானது. இதில் கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம், மனுதாரர் தரப்பு ஆதாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது … Read more

காவி உடையில் படுகவர்ச்சியான நடனம்! பிரபல நடிகை, நடிகர் மீது வழக்கு

காவி உடையில் கவர்ச்சி பாடலில் நடனம் ஆடியதாக நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பதான் திரைப்படம் ஷாருக்கான் – தீபிகா படுகோன் நடித்துள்ள படம் பதான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25ம் திகதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்பாடல் காட்சியில் தீபிகா படுகோன் நீச்சலுடையில் படுகவர்ச்சியாக ஆடியிருந்தது வைரலாக பரவியது. அதோடு காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் அணிந்து தீபிகா … Read more

கஞ்சா விற்பனை குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தவர் மீது அடுத்த சில நிமிடங்களில் தாக்குதல்! காவல்துறை உடந்தை?

திருக்கழுகுன்றம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்த துரைதனசேகரன் என்பவர் காவல்துறையில், தங்களது பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையில் ஆதாரத்துடன் புகார் அளித்துவிட்டு திரும்பியபோது, மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த புகார் கொடுத்த நபர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் மாநில செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புகார் கொடுத்தது தொடர்பான தகவலை, கஞ்சா வியாபாரி களிடம் காவல்துறையினரே தெரிவித்ததாகவும், … Read more