இளம்பெண் கொலை வழக்கு விசாரணையில் புதிய தகவல்| Dinamalar
புதுடில்லி, புதுடில்லியில், இளம்பெண் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசார் கைப்பற்றிய எலும்புகள் ஷ்ரத்தாவுடையது தான் என மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடில்லியில் வசித்து வந்த அப்தாப் பூனேவாலா என்ற இளைஞர், தன்னுடன் ஒன்றாக வசித்த காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை நகரின் பல பகுதிகளில் வீசி எறிந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் … Read more