₹ 68,599 விலையில் ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் மாடலை மிக ஸ்டைலிஷாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் விற்பனைக்கு ரூ. 68,599 முதல் ரூ. 76,699 வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சூம் ஸ்கூட்டர் LX, VX மற்றும் ZX மூன்று வகைகளில் கிடைக்கிறது. முன்பதிவு, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. Hero Xoom 110 ஹீரோ Xoom ஸ்கூட்டர் மிகவும் ஸ்டைலிஷான நவீனத்துவ டிசைன் மொழியை பின்பற்றி உருவாக்கப்பட்டு புதிய … Read more

பாகிஸ்தான்: மசூதியில் குண்டு வெடிப்பு; 20-க்கும் மேற்பட்டோர் பலி… பலர் படுகாயம் – தொடரும் பதற்றம்!

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின், பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் இன்று வழக்கம் போல தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ததாக தெரிகிறது. அப்போது, அங்கு மதியம் 1.40 மணியளவில் திடீரென வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டிருக்கிறது. மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவர், தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! முரளி விஜய் அறிவிப்பு…

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்  முரளி விஜய் அறிவித்துள்ளார். இது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய் (Murali Vijay) , வலதுகை ஆட்டக்காரரான இவர்,  முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்,, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அணிக்காகவும் ஆடியவர். ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கடந்த  2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீனியர் … Read more

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து திரிகோணமலைக்கு 610 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

மகனுக்கு இந்தியா என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதி: வெளியிட்டுள்ள நகைச்சுவையான காரணம்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் ஒருவர் தங்கள் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டு இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மகனுக்கு இந்தியா என  பெயர் சூட்டிய தம்பதி பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஓமர் இசா என்ற நபர் வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவரது மகன் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைத்து பெற்றோர்களுக்கும் அறிவுரை ஒன்றை … Read more

கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன் என தலித் இளைஞரை மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்! துரைமுருகன்

சென்னை: கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் சஸ்பெண்டு செய்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். `கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன்’‘ என பட்டியலின இளைஞரை மிரட்டும் சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தொடர்பான வீடியோ வைரலாகியது.  இதையடுத்து திமுக தலைமை அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம் மேற்கு வட்டத்தில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பட்டியலின சமூகத்தைச் … Read more

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். மசூதியில் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

நிறுத்த நினைத்த யாத்திரையை தொடர்ந்து நடத்த என்ன காரணம்: ரகசியம் உடைத்த ராகுல் | Rahul remembers what happened on the pilgrimage

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீ நகர்: பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் யாத்திரையில் நடந்ததை காங்., எம்.பி ராகுல் நினைவுக்கூர்ந்து பேசினார். காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்ட கன்னியாகுமரி – காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை இன்று(ஜன.,30) நிறைவு பெற்றது. இதையடுத்து பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா , திமுக எம்பி திருச்சி சிவா, … Read more