ஜிஎஸ்டி இல்லாமல் வணிக நிறுவனங்கள் பில் கொடுத்தால் உரிமம் ரத்து செய்யப்படும்: அமைச்சர் மூர்த்தி

மதுரை: ஜிஎஸ்டி இல்லாமல் வணிக நிறுவனங்கள் பில் கொடுத்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். நிர்வாக நலனுக்காக மதுரை பதிவுத்துறை மண்டலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது எனவும் மதுரை மாவட்டத்தில் 5 புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

“மோடி ஜி உங்களுக்கு என் அன்பும், ஆதரவும்; உங்களின் தாயார் விரைவில் குணமடைவார்!" – ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி கடந்த திங்கள்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக யு.என்.மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், `ஹீராபென் மோடியின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தாயாருடன் பிரதமர் மோடி இந்த நிலையில், இன்று அகமதாபாத் வந்தடைந்த பிரதமர் மோடி, தன்னுடைய தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கிடையில் அரசியல் தலைவர்கள் பலரும் மோடிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். … Read more

2023ஆம் ஆண்டு புடினுக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கும் எப்படி இருக்கும்: ரஷ்ய பெண் ஜோதிடக்கலைஞரின் கணிப்பு

2023 எப்படி இருக்கும் என்பதில் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை ஆர்வம் காட்டி வரும் நிலையில், இப்போதைய சூழலில் மிகவும் பிரபலமான ஒருவருக்கொருவர் எதிரான ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு 2023 எப்படி இருக்கும் என்பதைக் குறித்து கணித்துள்ளார் ரஷ்ய பெண் ஜோதிடக்கலைஞர் ஒருவர். 2023 புடினுக்கு எப்படி இருக்கும்? ரஷ்ய ஜோதிடக்கலைஞரான Marina Vasilieva என்பவர் 2023ஆம் ஆண்டு புடின் தனது தலைவிதியை சந்திக்கும் ஆண்டாக இருக்கும் … Read more

அன்பு விலைமதிப்பற்றது: பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து…

டெல்லி: அன்பு முடிவில்லாதது, விலைமதிப்பற்றது மோடி ஜி. இந்த கடினமான நேரத்தில் எனது அன்பு ஆதரவும் உங்களுடன் இருக்கிறது என ராகுல் காந்தி  டிவிட் பதிவிட்டுள்ளார். மேலும்,   பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின்  99வயதான தாயார் உடல்நலக்குறைவால்  குஜராத் மாநிலம் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர், … Read more

2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

சென்னை: 2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-ல் 15,146 பணியிடங்களை நிரப்ப முடிவ செய்யப்பட்டுள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான 4000 பணியிடங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 … Read more

Safe zone மனநிலையால் ஏற்பட்ட விளைவு! – அனுபவ பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் வாழ்க்கையில் சில நேரங்களில் கடுமையான தருணங்களை சந்திக்க நேரிடும்! உண்மையில் ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது, இரண்டு விதமான நிகழ்வுகளையும் கடந்தே செல்லும்.. ஒன்று மகிழ்ச்சி, மற்றொன்று துக்கம். இரண்டும் நன்மைக்கு தான் என்ற மனநிலையை. ஆழமாக பற்றிப் பிடிக்க வேண்டும். மாறாக … Read more

இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்கு அளிக்க இருக்கும் அடுத்த அதிர்ச்சி: இளவரசர் வில்லியம் கவலை என தகவல்

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ் தொடர் தோல்வி என பல ராஜ குடும்ப எழுத்தாளர்களால் கருதப்படுகிறது. ஆனால், ஹரியின் ராஜ குடும்பம் மீதான தாக்குதல் அத்துடன் முடிந்துவிடவில்லை. இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்கு அளிக்க இருக்கும் அடுத்த அதிர்ச்சி காரணம், இன்னும் சில வாரங்களில், அதாவது, 2023 ஜனவரி 10ஆம் திகதி, ஹரியின் புத்தகம் ஒன்று வெளியாக உள்ளது. அதில் ராஜ குடும்பத்துக்கு மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை ஹரி வெளியிடுவார் என … Read more

பள்ளிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்! அமைச்சர் தகவல்

சென்னை: பள்ளிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளது. மீண்டும் பரவி வரும் புதிய வகை கொரோனா காரணமாக, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், முக்கவசம் அணிவது, சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக இருக்கும்படி, மத்தியஅரசு வலியுறுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்க எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமல் அனுமதி வழங்கி உள்ளது. அதேவளையில் 2வது நாள் தொடங்கும் பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை … Read more

ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார்: மருது அழகுராஜ் குற்றச்சாட்டு

சென்னை: எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தலைமை கழகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை கழகம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார் எனவும் குற்றம் சாட்டினார்.