வணிக வரித்துறையில் கடந்த நிதியாண்டை விட வருவாய் அதிகரிப்பு

சென்னை: வணிக வரித்துறையில் கடந்த டிச. 2022 வரை ரூ.96,756 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஜனவரி மாதம் ரூ.7,300 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில் மொத்த வருவாய் (23.1.2023) ரூ.1,04,059 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல பதிவுத்துறையில் ரூ.13,631.33 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

நீதித்துறையை கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.,: கெஜ்ரிவால் தாக்கு| BJP wants to take over the judiciary: Kejriwal attacks

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நீதித்துறையை கைப்பற்ற பா.ஜ., அரசு நினைக்கிறது என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றி்ல மத்திய சட்டத்துறை அமைச்சர் பேசுகையில், மக்கள் பிரதிநிதிகளை மக்கள் ஓட்டளித்து தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், நீதிபதிகள் தேர்தல்களை சந்திப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதனால் அவர்களை மாற்ற முடியாது. அதே நேரத்தில் வழக்குகளை கையாளும் விதம், வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில், நீதிபதிகளை மக்கள் கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிட்டு … Read more

அதிமுக-விலோ குழப்பம்… குஜராத்தில் பொங்கல் கொண்டாட்டம் – ஓ.பி.எஸ் பிளான் தான் என்ன?!

பன்னீர், எடப்பாடி இடையேயான மோதலால் அ.தி.மு.க  இரண்டாகத் துண்டாகி கிடக்கிறது. பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அதன் இறுதித் தீர்ப்பை எதிர்நோக்கி இரு தரப்பும் தவம் கிடக்கிறது. இந்தச் சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், அத்தொகுதிக்கு  பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். ஜி.கே.வாசன் … Read more

கழுத்தில் கடிகாரம்., பொதுமக்கள் மீது பணத்தை பொழிந்த நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

பெங்களூருவில் மேம்பாலத்திலிருந்து ஒருவர் பணத்தை பொதுமக்கள் மீது பொழிந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பணத்தாள்கள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், தலைநகர் பெங்களூருவில் உள்ள கே.ஆர் புறம் மேம்பாலத்தின் மேலிருந்து, நகரின் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மக்கள் மீது பணத்தை அள்ளி வீசி எறிந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வீசப்பட்ட பணம் 10 ரூபாய் தாள்கள் எனவும், குறைந்தது 3,000 மதிப்புள்ள நோட்டுகளை அவர் வீசியதாக … Read more

பழநி முருகன் கோயில் கும்பாபிஷேசம்: 27ந்தேதி திண்டுக்கல் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிப்பு…

சென்னை: பழநி தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேசம் ஜனவரி மாதம் 27ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை (27ந்தேதி) திண்டுக்கல் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக கும்பாபிஷேசம் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் 27ந்தேதி கும்பாபிஷேசம் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெற்று … Read more

நாட்டையே உலுக்கிய டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் 6,629 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!!

டெல்லி: நாட்டையே உலுக்கிய டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் 6,629 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது போலீஸ். கொலைக் குற்றவாளி அஃப்தாப் மீது 6,629 பக்க குற்றப்பத்திரிக்கையை டெல்லி காவல்துறை  தாக்கல் செய்தது. தடயங்களை மறைத்ததாக அஃப்தாப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

நியூசி.,க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி 385 ரன் குவிப்பு| Last ODI against New Zealand: Team India scored 385 runs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 385 ரன்கள் குவித்தது. துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம் விளாசினர். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் … Read more

உணவு இலவசம், சுவாசிக்க காற்றுக்கு ரூ.2500… தாய்லாந்தின் நிலைமை என்ன?

தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை வந்து விட்டது, அடுத்தது காற்றையும் காசு கொடுத்து வாங்கும் சூழல் உருவாகும் என்று சூழலியல் ஆர்வலர்கள் பலர் நம்மை எச்சரித்தனர். இந்நிலையில் தான், தூய்மையான காற்றை சுவாசிக்க விலை நிர்ணயம் செய்துள்ளார் தாய்லாந்து நாட்டை சேர்ந்த விவசாயி டுசிட் கசாய். air pollution in Bangkok, Thailand. “காற்று மாசு கிடக்கட்டும்… காசு வருதுல்ல?” – அதிரவைக்கும் `பிஎஸ்4’ வாகனப்பதிவு மோசடி! தாய்லாந்து நாட்டில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து … Read more

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தொழிலாளி முகமூடி கொள்ளையர்களால் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் பெட்ரோல் பங்க்கில் நடந்த கொள்ளை சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரத்தில் டகோனி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஜனவரி 17-ஆம் திகதி (செவ்வாய்கிழமை) 3 பேர் கொண்ட கொள்ளைக்கார கும்பல் தாக்குதல் நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. அந்தப் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துவந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 67 வயது தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். Jagbani 67 வயதான பாட்ரோ … Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அனுமதி விவகாரம்: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு…

சென்னை:  ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க மறுத்து வரும் தமிழகஅரசின் நடவடிக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  கடந்த ஆண்டு  50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி   ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில்,  சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி,  காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.  ஆனால், காவல்துறை அதன்பிறகு, அனுமதி கோரிய  சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி வழங்கியது. பின்னர் … Read more