“பின்தொடர்றேன்னு தெரிஞ்சதும் ஓட ஆரம்பிச்சான்''- செல்போன் திருடனை விரட்டிப்பிடித்த காவலர் காளீஸ்வரி!
பேருந்து பயணியிடம் இருந்து செல்போனை திருடிக்கொண்டு ஓடிய வட மாநில இளைஞரை விரட்டிப் பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை, அவருடைய உயர் அதிகாரிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள். தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ், காளீஸ்வரிக்கு சால்வை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார். தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் காளீஸ்வரியிடம் பேசினோம்… “நேற்று முன்தினம் தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். அது மாலை நேரம் என்பதால், கூட்டம் … Read more