தகவல் தொழில்நுட்ப பூங்கா விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ்

நாகர்கோவில்: கோணத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப பூங்கா விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

\"அணு ஆயுதங்கள் இருக்கு.. எங்க ராணுவ பலம் தெரியுமா!\" காஷ்மீர் விவகாரம் குறித்தும் பாக். பிரதமர் பரபர

International oi-Vigneshkumar இஸ்லாமாபாத்: காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழலில் நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக இப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லதொரு உறவு இருந்ததில்லை. எப்போதும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வரும். குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தைச் சொல்லலாம். இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரை தங்களுக்குச் சொந்தம் எனப் பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருவதே இரு நாடுகளுக்கும் … Read more

தேர்வு மோசடி; அசாமில் இணைய சேவை நிறுத்தம்| Dinamalar

கவுகாத்தி: அசாமில் அரசு பணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு நடக்கும் இடங்களில் 4 மணி நேரம் இணைய சேவையை நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அசாம் அரசுத்துறையில் காலியாக உள்ள 27 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடைபெறுகிறது. இதனை எழுதுவதற்கு 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆக., 28 முதல் செப்., 11 வரை நடக்கும் தேர்வு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய … Read more

வியாட்நாமில் மேலும் $300 பில்லியன் முதலீடு செய்யும் பாக்ஸ்கான்.. இந்தியாவில் எப்போது?

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி சப்ளையரான ஃபாக்ஸ்கான் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் நாட்டின் வடக்கு பகுதிகளில் உற்பத்தியினை அதிகரிக்கவும், விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. தாய்வானை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், Bac Giang மாகாணத்தில் 125 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளதாக தெரிவித்துள்ளது. பல ஆயிரம் பேருக்கு வேலை ஃபாக்ஸ்கானின் இந்த முதலீட்டின் மூலம் 30,000 பேருக்கு வேலை வாய்ப்பினை அளிக்க முடியும் … Read more

`சிகிச்சை அளித்த மருத்துவர்; ஓவியமாக வரைந்த சிறுவன்' – பள்ளி மாணவர்களுக்கு உதவுபவர் என நெகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் வசித்து வரும் நல்லமுத்து மகேஷ்வரி தம்பதியரின் மூத்த மகன் ரெனொ. அருகில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ரெனொவை மேட்டுப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் ரெனொவிற்கு சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். நான்கு நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த ரெனொ குணமடைந்து வீடு திரும்புகையில் மருத்துவரை கோட்டோவியமாக வரைந்து பரிசளித்திருக்கிறார். இதை … Read more

தூத்துக்குடியில் கூலி தொழிலாளியை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது

தூத்துக்குடி; தூத்துக்குடியில் கூலி தொழிலாளியை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கூலி தொழிலாளி சரவணகுமார் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.

இது பாஜகவின் மத பயங்கரவாதம்.. வேறென்ன ஆதாரம் தேவை? பாஜக தலைவர் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

India oi-Noorul Ahamed Jahaber Ali ஜெய்பூர்: பசு வதை செய்ததற்காக 5 பேரை நாங்கள் கொலை செய்து இருக்கிறோம் என்று ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஞான் தேவ் அஹுஜா பேசியுள்ள நிலையில், இது பாஜகவின் மத பயங்கரவாதம் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. ராஜஸ்தானில் முந்தைய வசுந்தர ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிகாலத்தில் ராம்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் ஞான் தேவ் அஹுஜா. அந்த … Read more

தகவல்களை சீனாவுக்கு அனுப்பிய கும்பல் கைது| Dinamalar

புதுடில்லி: சீனர்கள் நடத்திய கடன் வழங்கும் செயலிகள் மூலம் ரூ.500 கோடி மோசடி செய்த 22 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் , பயனர்களின் முக்கிய தகவல்களை சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக டில்லி போலீசார் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக இந்த கும்பலின் நடவடிக்கைகளை கவனித்து வந்த டில்லி போலீசார் அதிரடியாக இறங்கி அவர்களை கைது செய்துள்ளனர். டில்லி, … Read more

அடி சக்க.. தங்கம் விலை குறையுமா.. ஏன் என்ன காரணம்.. கவனிக்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்..!

தொடர்ச்சியாக முந்தைய 4 வாரங்களாகவே தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வந்த நிலையில், நடப்பு வாரத்தில் சற்று சரிவில் காணப்பட்டது. இது வரும் வாரத்தில் எப்படியிருக்கும்? வார இறுதியில் சற்று அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், தொடர்ந்து தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு கீழாகவே முடிவடைந்துள்ளது. குறிப்பாக எம்சிஎக்ஸ் கோல்டு விலையானது 2% குறைந்துள்ள நிலையில், ஸ்பாட் கோல்டின் விலையானது 3% சரிவினைக் கண்டுள்ளது. இது டாலர் மதிப்பு வலுவாக காணப்பட்ட நிலையில் சரிவில் காணப்பட்டது. ஆக வரும் … Read more

“சாவர்க்கரை கொண்டாடி வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்!" – பாஜகவை சாடும் கொளத்தூர் மணி

புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில், “உண்மையும் புரட்டும்” என்ற தலைப்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் புதுச்சேரி உருளையன்பேட் சுதேசி பஞ்சாலை அருகில் நேற்று மாலை (20.08.2022) நடைபெற்றது. அந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் கொளத்தூர் மணி, “திடீரென பா.ஜ.க-வினர் சாவர்க்கரை தூக்கி கொண்டாடுகின்றனர். அதன்மூலம் அவர்கள் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள். ஆனால், நாம் இருக்கும் வரை வரலாற்றை மாற்ற முடியாது என அவர்களுக்கு தெரியவில்லை. இந்திய சுதந்திர வரலாற்றில் … Read more