மழையின் அளவு படிப்படியாக குறையும் 3 மாவட்டத்திற்கு மட்டும் மஞ்சள் எச்சரிக்கை| Dinamalar
பெங்களூரு : ‘கர்நாடகாவின் கடலோரம், மலைப்பகுதி மாவட்டங்களை தவிர, மற்ற இடங்களில் மழையின் அளவு, படிப்படியாக குறையும்’ என வானிலை மையம் தெரிவித்துள்ளது. உத்தரகன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில், ‘மஞ்சள் எச்சரிக்கை’ அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், மழை நீடிக்கிறது. ஆறுகள், அணைகள், ஏரிகளில் நீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன.பெலகாவி நகர் உட்பட மாவட்டம் முழுதும் கனமழை பெய்கிறது. கிருஷ்ணா ஆறு, துணை ஆறுகள், மல்லப்பிரபா, ஹிரண்யகேசி, மார்கண்டேயா … Read more