கூட்டத்தில் பெண் நிர்வாகியிடம் சீண்டல்? – பாஜக மாநில நிர்வாகிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாயத் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், பா.ஜ.க சார்பில் முன்னாள் அமைச்சரும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தலைமையில் ஏராளமான பா.ஜ.க-வினர் அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும்போது, பொன் பாலகணபதி அருகில் இருந்த பா.ஜ.க பெண் நிர்வாகிமீது தொடுவது போன்றும், அதனை அந்தப் பெண் நிர்வாகி தடுப்பது … Read more

உச்சநீதிமன்ற அனுமதியுடன் பிசிசிஐ விதி மாறுகிறது…

பிசிசிஐ தலைவர் அல்லது செயலாளர் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருமுறைக்கு மேல் மறுமுறை உடனடியாக தொடரமுடியாது என்ற விதியில் திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றின் தலைவராகவும் செயலாளராகவும் பொறுப்பு வகிப்பவர்கள் மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் போட்டியிட முடியாது என்பது தற்போதுள்ள விதி. இதனை மாநில அளவில் இரண்டு முறையும் அகில இந்திய அளவில் இரண்டு முறையும் தொடர்ந்து முக்கிய பொறுப்பு வகிக்கும் வகையில் திருத்தம் செய்ய அனுமதித்துள்ளது. … Read more

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

விதி மீறும் கல்குவாரிகள்; அணைக்கு ஆபத்து| Dinamalar

பெலகாவி : பெலகாவி மாவட்டத்தில், நடந்து வரும் கல்குவாரி தொழிலால், ஹரினாளா அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள், உயிரை கையில் பிடித்தபடி வாழ்கின்றனர்.பெலகாவி பைலஹொங்கலாவின், மரிகட்டி, கனிகொப்பா கிராமங்களில் கற்களை பொடியாக்கும் குவாரிகளில், ஜெலட்டின் வெடிக்கப்படுகிறது. இதனால் கிராமத்தினர், விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இது மட்டுமின்றி, சுற்றுச்சூழலும், நீர் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.சுரங்கம், நில ஆய்வியல் துறை நிர்ணயித்த நெறிமுறைகள், விதிமுறைகளை மீறி, வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெடிகளின் வீரியம் அதிகம் கொண்டதால், … Read more

மதுரை-க்கு வந்த அமெரிக்க டெக் நிறுவனம்.. பிரம்மாண்ட அலுவலகம்.. 3500 பேருக்கு ஜாக்பாட்..!

மதுரை-யில் தற்போது பல ஐடி நிறுவனங்கள் அடுத்தடுத்து அலுவலகத்தை அமைத்து வருகிறது. மதுரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் வடபழஞ்சி ஐடி பார்க்-ல் பல உள்நாட்டு ஐடி நிறுவனங்கள் அலுவலகத்தை அமைத்து வரும் நிலையில், தற்போது அமெரிக்க டெக் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து புதிய கேம்பஸ்-ஐ அமைத்து வருகிறது. இது மதுரை மட்டும் அல்லாமல் தென் மாவட்டங்களில் இருக்கும் பட்டதாரிகள் அனைவருக்கும் ஜாக்பாட் ஆக இருக்கப் போகிறது. 1.54 லட்சம் கோடி முதலீடு … Read more

பதவியில் தொடரும் கங்குலி – ஜெய் ஷா; பிசிசிஐ-யின் சட்டத் திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

பிசிசிஐ-யின் உறுப்பினர்களின் பதவிக்கால நீட்டிப்புத் தொடர்பான புதிய சட்ட விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் பிசிசிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கிரிக்கெட் நல்ல முறையில் நெறிப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ முன்மொழிந்துள்ள சில சட்டத் திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். கங்குலி, ஜெய் ஷா இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், பிசிசிஐ ஒரு … Read more

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி….

சென்னை; முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது,  2018ம் ஆண்டில்  நெடுஞ்சாலை தொடர்பாக டெண்டர் விடப்பட்டது. அதன்படி, ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1,515 கோடியாக உயர்த்தப்பட்டு … Read more

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17-30ம் தேதி வரை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் நடைபெறும் என அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.

வெடிகுண்டு, துப்பாக்கிகளுடன் ஆட்களை இறக்கிய பாஜக.. மேற்கு வங்க வன்முறையால் மம்தா பானர்ஜி கோபம்

India oi-Nantha Kumar R கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவினரின் பேரணியில் நேற்று கலவரம் நடந்த நிலையில் மாநிலத்தில் வன்முறையை நிகழ்த்த பாஜக பிற மாநிலங்களில் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் ஆட்களை அழைத்து வந்துள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இங்கு ஹாட்ரிக் அதாவது 3வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியை பிடித்துள்ளார். … Read more

மழை சேதம் விவாதிக்க வாய்ப்பு; காங்., – ம.ஜ.த., தனித்தனியாக நோட்டீஸ்

பெங்களூரு : கர்நாடகாவில் கனமழை, வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து, ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ், சட்டசபையில் விவாதிக்க வாய்ப்பளிக்கும்படி, சட்டசபை செயலருக்கு நேற்று காங்கிரஸ், ம.ஜ.த., தனித்தனியாக நோட்டீஸ் அளித்துள்ளன.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர் குமாரசாமி, தனித்தனியாக நோட்டீஸ் அளித்து, மழை சேதம் தொடர்பாக விவாதிக்க வாய்ப்பளிக்கும்படி கோரினர். சித்தராமையா அளித்த நோட்டீசில், ‘மே மாதத்திலிருந்து மாநிலத்தில் மழை பெய்வதால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரிலும் மழையால் மக்கள் நெருக்கடியில் சிக்கிஉள்ளனர். … Read more