திருமணம் செய்து கொள்ள இளம் பெண்ணுக்கு தொந்தரவு பிரபல சினிமா தயாரிப்பாளர் வாராகி கைது: வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நடவடிக்கை
சென்னை: திருமணம் செய்து கொள்ளுமாறு இளம் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்ததாக சினிமா தயாரிப்பாளர் வாராகியை வடபழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராணி(31)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் வசித்து வரும் குடியிருப்பில் சினிமா தயாரிப்பாளர் வாராகி வசித்து வருகிறார். இவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும் … Read more