உக்ரைன் ரயில் நிலையங்களை ஏவுகணையால் அழித்த ரஷ்யா: 5 பேர் பரிதாபமாக பலி!

செய்தி சுருக்கம்: உக்ரைனின் 5 ரயில் நிலையங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல். 5 பேர் உயிரிழப்பு 18 பேர் படுகாயம் என பிராந்திய வழக்கறிஞர் அலுவலகம் அறிவிப்பு “எதிரி முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க முயற்சிக்கிறார்” என பிராந்திய ஆளுநர் குற்றசாட்டு உக்ரைனின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களின் ஐந்து ரயில் நிலையங்களை ரஷ்யா எவுகணைகளை கொண்டு தாக்கி அழித்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தொடங்கிய 60 நாள்களுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க அரசின் … Read more

கல்வி மாஃபியாக்களை தோலுறித்த ‘செல்ஃபி’ :  ஓடிடியில் வெளியானது 

மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில்  வெளியான திரைப்படம் ‘செல்ஃபி’. பொறியியல் மாணவரான ஜி.வி.பிரகாஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவரகளை கல்லூரியில் சேர்க்கும் ஏஜெண்டாக, ஆள் பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கெளதம் மேனன் வில்லனாக நடிப்பில் மிரட்டியிருந்தார் . மேலும் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், குணநிதி உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தார்கள். பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் கல்விக் கொள்ளைப் பற்றி விழிப்புணர்வூட்டிய, புதிய கதைக் களம் என்று பல தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தன. … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வரும் அமெரிக்கா, தற்போது உக்ரைனுக்கு 165 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம், உக்ரைனுக்கு சாத்தியமான விற்பனையை அங்கீகரித்துள்ளது. அத்துடன், சட்டப்பூர்வ அறிவிப்பை பாராளுமன்றத்திடம் வழங்கி உள்ளது.  பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்த ஆயுத விற்பனையைத் தடுக்க முடியும். ஆனால் பிப்ரவரி … Read more

தமிழ்நாடு முழுவதும் 55 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 55 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம், சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய வருவாய்; பங்கு கேட்கும் மாநிலங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-தமிழகத்தை தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களும், விமான நிலையத்தை தனியாருக்கு அளிப்பதால் கிடைக்கும் வருவாயில் பங்கு தரும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. தேசிய பணமாக்கல் கொள்கைப்படி தமிழகத்தின் திருச்சி, உ.பி.,யின் வாரணாசி உள்ளிட்ட, 25 விமான நிலையங்களின் பராமரிப்பு பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘விமான போக்குவரத்து ஆணையம், தனியாருடன் சேர்ந்து மேற்கொள்ள உள்ள இத்திட்டத்தில் கிடைக்கும் வருவாயில், மாநில அரசுக்கு … Read more

சாமானியர்களுக்கு சர்பிரைஸ்.. 6வது நாளாக சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க!

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்றும் சரிவினைக் கண்டுள்ளது சர்பிரைஸ் தரும் விஷயமாக உள்ளது. எனினும் இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது -மீண்டும் ஏற்றம் காணுமா? இன்று என்ன செய்யலாம்? வாங்கலாமா? வேண்டாமா? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி … Read more

UPSC: "நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி கைகூடும்!" – வழிகாட்டும் ராகுல் IPS

மெக்கானிக்கல் இன்ஜினியரான ராகுல் தனது துறையை விட்டு விலகி, மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பதற்காக UPSC தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றவர். தற்போது சென்னையில் IPS பயிற்சியில் இருக்கும் அவர், தன்னை நெல்லைக்காரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார். ராகுல் IPS “நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். ஆனால் எனக்கு ஏனோ அந்தத் துறையில் ஈடுபாடு வரவில்லை. அதனால் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழுந்ததும்,UPSC தேர்வுக்குத் தயாராவது என முடிவெடுத்தேன். பெற்றோரும் … Read more

இலங்கையில் ராஜபக்சேவின் கொடுங்கோல் ஆட்சி.. தமிழர்களின் ஆன்மா சும்மா விடாது! டி.ராஜேந்தர் ஆவேசம்

இலங்கையில் ராஜபக்சேவின் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது என நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் ஆவேசமாக கண்டித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இலங்கை தவித்து வரும் நிலையில், ராஜபக்சேவை கண்டித்து இயக்குனர் டி.ராஜேந்தர் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அதனை வெளியிட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய அவர், இலங்கை மக்கள் படும் துயரத்தை எண்ணி ஆவேசமாக ராஜபக்சேவை கண்டித்து பேசினார். அவர் பேசும்போது, ‘நாங்கள் கோரிக்கை வைத்ததை ஏற்று இந்திய அரசு 1.9 பில்லியன் டொலர்களை இலங்கை மக்களுக்காக கொடுத்தது. அதன் பின்னர் … Read more

25/04/2022: தமிழ்நாட்டில் இன்று 55 பேருக்கு கொரோனா பாதிப்பு – சென்னை ஐஐடியில் பாதிப்பு 78ஆக உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 55 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில் பாதிப்பு 78ஆக உயர்ர்ந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8 மணி அளவில் வெளியிட்டுள்ள  கொரோனா அறிவிப்பில், கடந்த 24மணிநேரத்தில், 17,249  சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 6,60,72,44 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த … Read more

ஷிகர் தவான் அதிரடி… சென்னை அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஷிகர் தவான்- பனுகா ராஜபக்சே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான், 37 … Read more