துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை கவர்னர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் ஆட்சிக்கு விரோதமானது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் இன்று கொண்டுவரப்பட்ட சட்ட முன் வடிவின் மீது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நம்முடைய உயர் கல்வித் துறை அமைச்சர்களால் கொண்டு வரப்பட்டிருக்கக் கூடிய இந்தச் சட்டமுன்வடிவு குறித்து நானும் சில செய்திகளை இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வி அளிப்பதில் இந்தப் பல்கலைக்கழகங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை ஆற்றி … Read more

எழுத்தாளர் ராஜ் கௌவுதமனுக்கு நீலம் நடத்தும் 'வேர்ச்சொல்' தலித் இலக்கிய கூடுகையில் 'வானம் இலக்கிய விருது': பா.ரஞ்சித்

சென்னை: எழுத்தாளர் ராஜ் கௌவுதமனுக்கு நீலம் நடத்தும் ‘வேர்ச்சொல்’ தலித் இலக்கிய கூடுகையில் ‘வானம் இலக்கிய விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வேர்ச்சொல்’ தலித் இலக்கிய கூடுகையில் ராஜ் கௌவுதமனை முதல் விருதாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.  இலக்கியத்தில் புனைவு, விமர்சனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு என பங்களித்தவர் ராஜ் கௌவுதமன் என்று பா.ரஞ்சித் குறிப்பிட்டிருக்கிறார்.

நாளைய மின் தடை| Dinamalar

காலை 10:00 மணி மதியம் 2:00 வரை லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணி: ஜிப்மர் வளாகம், மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையம், பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், நாவற்குளம்.டாக்டர் அன்னிபெசன்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், … Read more

'ஹிஜாப்' சர்ச்சையைத் தொடர்ந்து கர்நாடக பள்ளிக் கூடத்தில் 'பைபிள்' சர்ச்சை

பெங்களூரு கர்நாடகாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே ஹிஜாப் சர்ச்சை இருந்து வந்தது. முதலில் அங்குள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. அப்படியே அந்தத் தடை வேறு சில அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. கல்லூரி நிர்வாகங்களின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரித்து ராஜ் அமர்வு, கல்வி நிறுவனங்களில் … Read more

WFH or RTO: இந்திய நிறுவனங்களின் முடிவென்ன.. ஊழியர்களுக்கு சாதகமா?

கொரோனா என்ற வார்த்தை இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ? தொடர்ந்து அடுத்தடுத்த அலைகளை உருவாக்கி மக்களை பயத்திலேயே ஆழ்த்தியிருக்கிறது. இந்தியாவில் முதல் முறை கொரோனா வந்ததும் மக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்தனர். வேலையினை இழந்தனர். பலர் விலைமதிப்பற்ற தங்களது சொந்தங்களையே இழந்தனர். பல மாதங்கள் நீடித்த கொரோனாவினைக் கட்டுபடுத்த அரசு கடுமையான முயற்சிகளை எல்லாம் கையாண்டது. இது 15 நாட்கள் 1 மாதம் 2 மாதம் வரை இருக்கலாம் என்று நினைத்த நிலையில், வருடக் கணக்கில் … Read more

18 Siddhas – Indra Soundarajan சித்தர் ரகசியம் – 7 | சுத்தத் தங்கத்தில் சிலை செய்ய முடியுமா ?

#Siddhar #Bogar #Miracle பதினெட்டு சித்தர்கள், இந்த மண்ணுலகில் தோன்றி இன்றும் வாழும் அற்புதர்கள். அவர்களின் வாழ்க்கை குறித்து விரிவாகப் பேசுகிறார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் விளக்குகிறார். இந்தப் பகுதியில் கருவூரார் குறித்து விரிவாகப் பேசுகிறார். Source link

ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் நாடு! குழப்பத்தில் உலக நாடுகள்… இந்தியாவுக்கு சிக்கல்?

தனக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ரஷ்யா தீவிரமாக இறங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இச்செயலை கண்டித்து பல நாடுகள் ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இது ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமா ரஷ்யா தனக்கு ஆதரவான நாடுகளைத் திரட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதன்முக்கிய நடவடிக்கையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் பாகிஸ்தானின் புதிய பிரதமர் … Read more

தமிழக கல்விநிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திய மனு வாபஸ்!

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகள் அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கர்நாடகாவை போல தமிழ்நாட்டிலும் பள்ளிகல்லூரி மாணவர்களிடையே வேறுபாட்டை களையும் நோக்கில் “ ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை அணி தடை விதிக்க … Read more

குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பூந்தமல்லி : குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான வரலாற்று சிறப்புமிக்கது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகரை தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கோபுரங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் புதுப்பித்து வர்ணம் பூசும் பணி முழுமை அடைந்தது. தொடர்ந்து கடந்த … Read more

சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகிறார். அதிமுக அமைப்புகளின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிருக்கிறார்.