“மின் தடை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!" – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பழைய அரசு மருத்துவக் கல்லூரி வாளகத்தை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை, நேரில் ஆய்வு செய்தார். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் மின்வெட்டு குறித்து உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை அளித்து வருகிறார். அவர் பரப்பும் பொய் பிரசாரம் குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

வீட்டு படுக்கையறையில் இந்த பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்! புற்றுநோயை உண்டாக்குமாம்

நமது ஆரோக்கியத்தை நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் தான் நிர்ணயிக்கிறது. அந்த வகையில், நாம் படுக்கை அறையில் பயன்படுத்த கூடிய பல வித பொருட்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்துமாம்.  தலையணை உறை இன்று நாம் பயன்படுத்தும் தலையணை உறையானது முழுக்க முழுக்க வேதி பொருட்கள் நிறைந்த பஞ்சினால் தயாரிக்கின்றனர்.எனவே, தலையணை வாங்கும் போது, இயற்கை முறையில் உற்பத்தி செய்த காட்டன் பஞ்சினால் தயாரித்ததா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் படுக்கை அறையில் நீங்கள் … Read more

விலை கடும் வீழ்ச்சி… வெங்காயத்தை மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் விவசாயி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பனப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். தற்போது வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், அறுவடை செய்வதற்கான ஆட்கள் கூலி, சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஆகும் போக்குவரத்து செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் தனது தோட்டத்திற்கு வந்து வெங்காயத்தை இலவசமாக எடுத்து செல்லுங்கள் என அதிருப்தியுடன் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.   அந்த வீடியோவில் பேசிய சிவராஜ், ‘வெங்காயம் விலை வீழ்ச்சி … Read more

கண்டமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது: போலீஸ் விசாரணை

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா கைது செய்யப்பட்டார். கிராம சபை கூட்டத்தின்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியில் அடித்ததாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த புகாரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யா கைது செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  

நெட் தேர்விற்கு மே 20 வரை அவகாசம்| Dinamalar

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். … Read more

சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் விலை கண்காணிப்பு – மத்திய அரசு

புதுடெல்லி, இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது பாமாயில் ஆகும். நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாமாயில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து 8.3 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசிய அரசு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்வதற்கு திடீர் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் அதன் விலை உன்னிப்பாக … Read more

தஞ்சை தேர் விபத்து: `தமிழக அரசிடம் இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்!' – ஒரு நபர் குழு தகவல்

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் கடந்த 26-ம் தேதி இரவு நடைபெற்ற தேர்த் திருவிழாவில், மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகினர். காயமடைந்த 17-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. களிமேடு தேர் விபத்து குறித்து ஆய்வு இதைத்தொடர்ந்து, விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில், ஒருநபர் குழுவை … Read more

காது பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொலை! மூடப்பட்டிருந்த கண்கள்… உக்ரைனில் சமீபத்திய பயங்கரம்

உக்ரைனில் ரஷ்யா நேற்று நடத்திய நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட கொடூரங்கள் அம்பலமாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த நிலையில் நேற்று ரஷ்ய படைகளின் தாக்குதலில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அந்நாட்டு ராணுவ தரப்பில் கூறும்போது, நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் 17 ராணுவ கட்டமைப்புகள், உயர் துல்லிய ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டன. உக்ரைனை அடுத்து இன்னொரு நாட்டின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த … Read more

வணிக சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரிப்பு

சென்னை: வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.100 அதிகரித்து டெல்லியில் ரூ.2355.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. … Read more

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 160 கி.மீ வேகத்தில் செல்லும் 25 புதிய சரக்கு ரெயில்கள்- சென்னை ஐ.சி.எப்.பில் தயாராகிறது

புதுடெல்லி: உள்நாட்டு தொழில் நுட்பத்தில் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வந்தே பாரத் ரெயில் திட்டத்தின் கீழ் புதிதாக சரக்கு ரெயில்கள் இயக்க இந்தியன் ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சரக்கு ரெயில்கள் அமைக்கும் சென்னை ஐ.சி.எப்.பில் தற்போது நடைபெற்று வருகிறது. சரக்கு ரெயில்களை புதிதாக தயாரிக்கும் பணியில் ரெயில் பெட்டி தொழிற் சாலை ஈடுபட்டுள்ளது. இந்த சரக்கு ரெயில் 16 பெட்டிகளை கொண்டது. இதில் 2 பெட்டிகளில் குளிரூட்டல் வசதி இருக்கும். … Read more