கல்வி, சமூகநீதி கூட்டாட்சி தத்துவம் குறித்த மாநாடு: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில் கல்வி சமூகநீதி கூட்டாட்சி தத்துவம் குறித்த தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது இதில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். எளிய மக்களின் கல்விக்காக நான் குரல் கொடுப்பேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் தொடர்ந்து எடுத்து வருகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரூ.1.68 லட்சம் கோடி வசூல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடந்த ஏப்., மாதம் ஜி.எஸ்.டி., வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இதற்கு முன்னர் மார்ச் மாதம் வசூலான 1.42 லட்சம் கோடி தான் அதிகமாக இருந்தது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஏப்., மாத ஜிஎஸ்டி வசூலான … Read more

“மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க பாஜக முயற்சி!" – சிவசேனா பகீர் புகார்

மகாராஷ்டிரா தினத்தையொட்டி மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே மகாராஷ்டிராவிற்காக பாடுபட்டு உயிர்தியாகம் செய்த தியாகிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவர் மனைவி ரேஷ்மிதாக்கரே மற்றும் மகன் ஆதித்யதாக்கரே ஆகியோரும் சென்றிருந்தனர். ஏற்கெனவே மகாராஷ்டிரா தினத்தையொட்டி சனிக்கிழமை ஆற்றிய உரையில் மகாராஷ்டிராவில் இந்துக்களை பிரிக்க பா.ஜ.க முயற்சிப்பதாக உத்தவ்தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக மராத்தி இந்துக்கள், மராத்தியர் அல்லாத இந்துக்கள் எனப் பிரிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது சிவசேனா தனது நாளேட்டில் … Read more

வெளிநாட்டில் தமிழருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை! முதல்முறையாக அரசு அளித்துள்ள விளக்கம்

சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. சிங்கப்பூரில் மலேஷியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியான நாகேந்திரன் தர்மலிங்கம் (34) ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதால் கைது செய்யப்பட்டார். 2010ல் அவருக்கு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது.இந்த தண்டனையை எதிர்த்து அவரது தாய் கடைசியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சமீபத்தில் அங்குள்ள நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து 27ம் திகதி நாகேந்திரனுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த வழக்கில் நாகேந்திரனுக்கு மன்னிப்பு அளிக்கக்கோரி … Read more

மீன்பிடி தடை காலம்: மீன் விலை இரு மடங்கு அதிகரிப்பு

சென்னை: மீன்பிடி தடை காலத்தால், சென்னை காசிமேடு சந்தையில் மீன் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வின் படி, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய வஞ்சரம் மீன் தற்போது 1000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரலில் புதிய உச்சம் – ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

புதுடெல்லி: ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏபரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 33,159 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 41,793 கோடி ஆகும். பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.36,705 கோடி உள்பட  ஐ.ஜி.எஸ்.டி. வசூல் ரூ.81,939 கோடி ஆகும்.  பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.857 கோடி உள்பட செஸ் வரி மூலம் ரூ.10,649 … Read more

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,67,540 கோடியாக அதிகரிப்பு: நிதியமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,67,540 கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2022 மார்ச்சில் வசூலான சரக்கு-சேவை வாரியான ரூ.1,42,095 கோடியுடன் ஒப்பிட்டால் ஏப்ரலில் வசூல் 17.9% அதிகமாகும்.

இந்தியாவில் சற்று குறைந்த கோவிட் பரவல்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினத்தை விட நேற்று(ஏப்.,30) கோவிட் பரவல் சற்று(364) குறைந்துள்ளது. நேற்று 3,324 கோவிட் உறுதியானது. இதற்கு முன்தினம் 3,688 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.தற்போது தினசரி தொற்று விகிதம் 0.71 சதவீதமாக உள்ளது. கோவிட் காரணமாக 19,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோவிட்டில் இருந்து 2,876 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,36,253 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்ததால், … Read more

PPF: பொது வருங்கால வைப்பு நிதி.. கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்..!

பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது மிக பிரபலமான அஞ்சலக திட்டங்களில் ஒன்றாகும். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. WFH: ஒரு ஊழியருக்கு 8,00,000 சேமிப்பு.. பணமழையில் கார்ப்பரேட் நிறுவனங்கள்..! முதிர்வு காலம் இது வரி சேமிப்பு திட்டங்களிலும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய 7 அம்சங்களை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். பொது வருங்கால … Read more

ரஷ்யா-உக்ரைன்: `இந்த நட்பு எப்போது புரியும்' நினைவுச் சின்னத்தை அகற்றிய உக்ரைன்;நெகிழ்ந்த மக்கள்!

உக்ரைன் தலைநகரான கிவ் பகுதியில் 1982-ல் சோவியத் யூனியனின் 60 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ‘People’s Friendship Arch’ எனும் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. இது ரஷ்ய-உக்ரேனிய நட்பைக் குறிக்கும் வகையில் உக்ரேனிய தொழிலாளியும் ரஷ்ய தொழிலாளியும் ஒன்றாகச் சேர்ந்து நிற்கும் சிலையாகும். தற்போது ரஷ்யா, உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்காண உக்ரைன் மக்களை கொன்று குவித்து வருகிறது. இதனால் உக்ரைன்- ரஷ்யா இடையான நட்பு முறிவடைந்துவிட்டது என்று உக்ரைனிய அதிகாரிகள் உக்ரைன் தலைநகரில் … Read more