எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

திண்டுக்கல்: எந்த திட்டமாக இருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு கொண்டு செல்லும் வரை ஓயமாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் ரூ.40.45 கோடி மதிப்பில் 60 திட்டப் பணிகளை திறந்து வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ந்த சூழ்நிலையிலும் உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை ஆற்றுவேன். திட்டங்களை கண்காணிப்பேன்திட்டத்தை அறிவித்தால் நிச்சயம் செயல்படுத்தி காட்டுவேன். திட்டம் குறித்து வாரந்தோறும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொள்வேன் என்று கூறினார்.

சென்னையில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் இருவேறு இடங்களில் 3 பேர் கொலை

சென்னை: சென்னையில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் இருவேறு இடங்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவான்மியூரில் மது அருந்திய போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமார் (27), அருண்(22), கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சதீஷ்குமார் மற்றும் அருண் கொலை தொடர்பாக தினேஷ் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

42 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தை பலப்படுத்தியவர் நரவானே- ராஜ்நாத் சிங்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டில்லி: 42 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தை பலப்படுத்தியவர் நரவானே என ராஜ்நாத் சிங் அவரது பதவி நிறைவு விழாவில் புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ பணியாளர்கள் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் நரவானேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரிவு உபசார விழா ஒன்றில் கலந்து கொண்டார். மேலும் புதிதாக அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெனரல் மனோஜ் பாண்டேவை வரவேற்றார். மேலும் … Read more

2 லட்சத்துக்கு குட்டி கார் இயான் வாங்கலாமா?|HYUNDAI ECON

விற்பனையில் டல் அடிக்கும் கார்கள் நின்று போனால் பரவாயில்லை; சேல்ஸில் சொல்லியடிக்கும் கார்கள்கூட திடீரென்று தயாரிப்பு நின்று போயிருக்கும். ஹூண்டாயின் இயான் அப்படிப்பட்ட கார்தான். நிஜமாகவே ஹூண்டாய்க்கு ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்த கார், இயான். முதன் முதலில் கார் வாங்குபவர்கள் ஆல்ட்டோவுக்குப் பிறகு… இல்லை இல்லை; இயானுக்கு அப்புறம்தான் ஆல்ட்டோவையே பலர் செக் லிஸ்ட்டில் வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட இயான், 2019 செப்டம்பர் மாதம் திடீரென்று நிறுத்தப்பட்டது என்று ஹூண்டாய் சொன்னபோது வருத்தமாகவே இருந்தது. … Read more

மரணத்திற்கு தள்ளப்படும் படுகாயமடைந்த ரஷ்ய வீரர்கள்: வெளிவரும் திகிலூட்டும் தகவல்

உக்ரைன் படையெடுப்பில் படுகாயமடைந்த டசின் கணக்கான ரஷ்ய வீரர்கள் கவனிக்கப்படாமல் மரணத்திற்கு தள்ளப்படும் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உக்ரைன் நாட்டவரான சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் குறித்த தகவலுக்கு அடிப்படையான காணொளிகளை வெளியிட்டுள்ளார். உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் படும் அவஸ்தைகளை அவர்களது உற்றார் உறவினர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தாம் வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஷ்ய ஊடகங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்துவதில்லை எனவும், விளாடிமிர் புடினுக்கு அவர்கள் அச்சப்பட்டு உண்மையை மறைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், … Read more

ஐபிஎல் 2022: குஜராத், மும்பை அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில், குஜராத் பெங்களுரு அணிகள் இடையே நடந்த போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான்- மும்பை அணிகள் இடையே நடந்த போட்டியில் மும்பை அணியும் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில், குஜராத் பெங்களுரு அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரூ அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. 171 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி 9.3 ஓவரில் 4 … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 62,60,333 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,60,333 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 51,32,29,643 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46,70,96,884 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,131 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காதி விற்று முதலில் சாதனை| Dinamalar

புதுடில்லி : காதி கிராமோத்யோக் ஆணையத்தின் விற்றுமுதல் கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் 20.54 சதவீதம் உயர்ந்து, 1.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது குறித்து குறு, சிறு, நடுத்தர துறை நிறுவன அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடியின் தொடர் ஆதரவு காரணமாக கடந்த நிதியாண்டில் காதி கிராமோத்யோக் ஆணையத்தின் விற்றுமுதல் முதன் முறையாக, 1.15 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, வேறு எந்த நுகர்பொருள் நிறுவனத்தின் விற்றுமுதலை விட அதிகம். … Read more

நடத்துனர் இல்லாமல் பயணியர் பஸ் சேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாலக்காடு–கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியில் நடத்துனர் இல்லாமல் பயணியர் பஸ் சேவையை தாமஸ் என்பவர் துவக்கியுள்ளார். இந்த பஸ்சில் ஓட்டுனர் மட்டும் இருப்பார். 45 இருக்கை கொண்ட இந்த பஸ்சில் டிக்கெட் எடுக்க வேண்டிய தேவையில்லை. பஸ்சில் வைக்கப்பட்டுள்ள மூன்று பக்கெட்டில் குறிப்பிட்ட கட்டணம் போட்டால் போதும்; பணம் இல்லாமலும் பயணம் செய்யலாம்.அடுத்த முறை இந்த பஸ்சில் பயணம் செய்யும் போது பணத்தை போட்டால் போதும். ஒவ்வொரு பஸ் … Read more

கொத்தாக கொல்லப்பட்ட உக்ரேனிய துருப்புகள்: இராணுவ முகாம்கள் பல சேதம்

உக்ரைனின் 17 இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக ரஷ்ய இராணுவத் தலைமை தகவல் வெளியிட்டுள்ளது. அதி நவீன ஏவுகணைகளால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தாக்குதலில் உக்ரைனின் ரோக்கட் சேமிப்பு கிடங்கு மற்றும் இராணுவ முகாம் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், பகலில் ரஷ்ய விமானப்படை முன்னெடுத்த தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட உக்ரேனிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாகவும், 23 கவச வாகனங்களை அழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்டதாக உள்ளூர் கவர்னர் … Read more